கல்யாண்ஜியா? வண்ணதாசனா?
_____________________________________
உங்கள் வியத்தகு கற்பனை அது!
அந்த நிலாச்சாப்பிட்டிற்குப் பின்
கவிழ்த்தியதில்
வானத்தையும் அல்லவா
கவிழ்த்து வைத்து விட்டார்கள் என்பது
கற்பனையில்
அந்த வானத்தையும் கடந்து சிகரம்
ஏறுவது அல்லவா!
சீனாக்காரனையும்
முந்திக்கொண்டு விட்டீர்களே!
வண்ணதாசன் அவர்களே!
நிலவு
உங்களுக்கு புறமுதுகு
காட்டியதே!
என்ன இருந்தாலும்
பெண் தானே
அது என
ஆணாதிக்கம் கொடி கட்டியதோ?
இல்லை என்கிறது
ஒரு கல்யாண்ஜி கவிதை.
நாணம் கொண்ட நிலவு
முகம் திருப்பி முகம் மூடிக்கொண்டதிலே
முதுகு காட்டிய
வெள்ளிப்பிரளயம் அது!
_____________________________________
சொற்கீரன்.