புதன், 22 அக்டோபர், 2025

நூறு நிலவா?

 ஒரு கிண்ண நிலவுப்

போதைக்கே

வானம் தெரிய வில்லை.

வீடு தெரிய வில்லை.

நூறு நிலவா?

அமாவாசையை

பர்தா போட்ட 

பௌர்ணமி  என்பேன்.

பௌர்ணமியை

ப்ளாக் ஹோல் சிமிழ்ப்

பொட்டு என்பேன்.

_________________________________

சொற்கீரன்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக