19.10.25ல் எழுதிய ஈரோடு தமிழன்பன் அவர்களின்
கவித்தேர்ச்சுவடு பற்றி நான் எழுதிய கவிதை
____________________________________________________
ரவிவர்மாவின் தூரிகைகள்
இந்த மழலை அனிச்சங்களை
ரத்த விளாறுகள்
ஆக்கி விடலாம்..வேண்டாம்.
கண்ணீர் சலங்கைகளை
கண்ணுக்குத்தெரியாத
ஒரு எரிமலைக்கோபம்
கால்களில் கட்டியிருக்கலாம்.
வேண்டாம்...பேரழிவு.
நட்சத்திரங்களுக்கு
எங்கும் போகவேண்டாம்.
அந்த சிறு பிஞ்சின் சிற்றறிவு கூட
ஏ ஐ க்களை சிரிப்பு முத்துக்களில்
சிதறி
கோடி ஒளி மீன்களை
கொட்டித்தரும்.
சொற்களுக்கு ஏது "பாலைத்திணையும்"
எழுத்துப்பஞ்சமும்?
அவை தமிழன்பன் கவிதைகளில்
எல்லா எல்லை விளிம்புகளையும்
உடைத்து நொறுக்கிக்கொண்டு
அல்லவா
முத்துச்சுடரோடு முந்தி நிற்கின்றன.
அவர் எழுத்துக்களின் "மயிர்வெளியில்" கூட
கோடி மயில்களின் தோகைகள்
தொட்டில் கட்டித்தருமே.
கண்ணே!கனி மழலையே!
உன் எச்சில் தெறிப்பின்
அட்லாண்டிக்கண்டத்தின்
பனி நெருப்பின்
அந்த தேள்கொடுக்கன் சூரியனும்
கூடாரம் போட்டுக்கொள்வானே.
ஈரோடு இருக்கையிலே அவன் எந்தத்
தேரோடு பவனி செல்வான்.
_____________________________________________
சொற்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக