புதன், 23 ஏப்ரல், 2025

ஊஞ்சல் பிரபஞ்சம்

 


ஊஞ்சல் பிரபஞ்சம்

____________________________________________________________________


கருப்பு பிண்டமும் கருப்பு ஆற்றலும் தான் நம் பிரபஞ்சத்தின் 95% வரை நிரவியுள்ளது என்றார்கள் விஞ்ஞானிகள்.இந்த கும்மிருட்டில் 5% மத்தாப்பு ஒளியின் பிக் பேங்க் தான் நம் தீபாவளியெல்லாம்.இப்போது இன்னொரு நுட்ப கணிதம் சொல்கிறார்கள்.மத்தாப்புக்குச்சியை இப்போது தான் வந்து கொளுத்தியிருக்கிறார்கள்.அதற்கு முன்னரே அந்த கரும் மூளிப்பிழம்பு வந்து கிடக்கிறது என்கிறார்கள்.இதற்கும் நம் குவாண்டத்தை ஏவி விட்டு தான் தீர்வு காண வேண்டும் போலிருக்கிறது."ஏ ஐ" இந்த இயற்பியல் கணிதவியல் கழைக்கூத்தாடித்தனங்களை நிறைய செய்திருக்கிறது.இப்போது அந்த "பேர்யானிக்" தொப்பூள்கொடி ஊஞ்சல் எங்கிருந்து தொங்கிக்கொண்டு ஊஞ்சல் ஆடுகிறது என்று பார்க்கவேண்டும்?

..............................இ பி எஸ்


Living as Dark Matter: An Existence Beyond Our Senses | Watch


Scientists Say Dark Matter May Be Giving Off a Signal


Dark Matter May Be Older Than the Universe—And It Might Live Forever

செவ்வாய், 22 ஏப்ரல், 2025

உலக புத்தக தினம்.

 

உலக புத்தக தினம்.

_______________________________


அச்சும் காகிதமும்

குவாண்டத்து

கரையான்களின்

தீனிகள் ஆன பின்

நாவல்களும்

கவிதைகளும்

மட்டுமே 

இங்கு மொட்டைவெளிகள்.

வணிகம் மருத்துவம் ஆனது.

மருத்துவம் வணிகம் ஆனது.

பசி மொய்க்கும் 

பொருளாதாரம்

டிஜிடல் சோற்றை

அளைந்து கொண்டிருக்கிறது.

மனிதன் கவலை

உடனுறை மனிதனின் 

பட்டினிச்சாவுகளில் இல்லை.

இற்று விழ்ந்த அவன்

எலும்பு மிச்சங்களிலும் இல்லை.

எங்கோ பல‌

ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள‌

ஏதோ ஒரு கோளின்

நீலக்கண்ணும் பச்சை உடம்புமாய்

உள்ள "அயலி"களின் மீது 

மட்டுமே.

ஆன் லைன் ஆராய்ச்சிகளுக்கும்

குவாண்டம் சிமிலேஷன்களுக்கும்

குறைச்சல் இல்லை.

அரசமரத்து

அறிவொளியின்

"புத்தம்"தந்த புத்தகம்

இன்று வெறும்

எழுத்துக்காடுகளா?

மனிதம் அரிக்கப்பட்டு விட்ட‌

வெறும் மண்டைக்காடுகளா?

காலம் தான் பதில் சொல்லும்

என்பதும் வெறும் பொய்யே.

காலம் என்பதும்

இந்த கணித இயற்பியலில்

கருந்துளையால்

என்றோ தின்னப்பட்டு விட்டது.


__________________________________________

சொற்கீரன்

பெட்டகம்.








1 நபர் படமாக இருக்கக்கூடும்
பெட்டகம்.
_________________________________________________________

நினைவுகளே
உணவுகள்.
அந்த
அம்பதுகளும்
அறுபதுகளும்
சுடச் சுட
வாழ்க்கை இலையில்
இன்னும்
ஆவி பறக்க
சுவை கூட்டுகின்றன.
கனவுகளின்
கலைடோஸ் கோப்பில்
வண்ணத்திருப்பு முனைகளே
அந்த "வயது"கள்.
அதற்குப் பின்னும் அந்த மாணிக்கத் தருணங்களின் குடும்பச் சித்திரம் பாசமும் நேசமுமாய் நீளமாய் ஒரு மின்னல் கயிற்றை கயிற்று இழுப்புப்போட்டியாய் மகிழ்ச்சி கொப்பளிக்க‌ விளையாடிய வாழ்க்கை எனும் பட்டறிவுகளின் பெட்டகத்தை திறந்து திறந்து மூடுவதே இன்னுமொரு வாழ்க்கை இங்கு! உள்ளத்துள்ளே அந்த நயாகராவின் அருவி கொட்டல்கள் மத்தளம் கொட்டிக்கொண்டே இருக்கின்றன. --------------------------------
சொற்கீரன்.

n

பாலையா‍ நாகேஷ்!

 பாலையா‍ நாகேஷ்!

_________________________________


"பாலையா"

இவருக்கு யாரைப் போடுவது

என்று 

குழம்பிப்போய்

மறு ஆக்க கதை உரிமையை

வேண்டாமென்று

கிளம்பிப்போனாராம்

திரு மனோபாலா அவர்கள்.

நான் இது வரை

ஐம்பது அறுபது தடவைகளுக்கு

மேல் பார்த்திருப்பேன்

அந்த "காதலிக்க நேரமில்லை"யை.

கதை சொல்லும் 

காட்சிக்கு

அந்த இருவரை

எங்கே போய் தேடினாலும்

கிடைக்கவே மாட்டார்கள்.

"கோழப்பய கோழப்பய.."

என்று

அட்டகாசமாய் பாலையா

சிரித்துக்கொண்டிருக்கும் போதே

"ஒரு திகில் ஊளையிடும்"

குரல் 

நாகேஷிடமிருந்து

வெளிப்படும் பாருங்கள்!

இந்த காட்சியையே

இன்னும்

ஆயிரம் தடவை பார்த்து பார்த்து

சிரிக்கலாம்.

ஓ! எமன் எனும்

எமகாதகப்பயலே

இவர்கள் இரண்டு பேரையுமாவது

எங்களுக்கு

கொண்டு வந்து

திருப்பிக்கொடுத்து விட்டுப்போயேன்.

சிரிப்பு என்பது

எல்லா மரணங்களையும்

அழித்துத் துடைத்துவிடும்

என்று அல்லவா

இந்த இரு நகைச்சுவை மன்னர்களும்

சொல்லி விட்டுச்

சென்றிருக்கிறார்கள்.

அறுபத்தியோரு ஆண்டுகளையும்

விழுங்கிக்கொண்டு அந்த‌

காட்சிகள் 

இன்னும் எங்கள் விலாக்களில்

கிச்சு கிச்சு மூட்டிக்கொண்டே

இருக்கின்றன.

படம் பார்ப்பது என்ற உணர்வு

அங்கே இல்லை.

அந்த அறையின் சோஃபா

விளிம்பில் இன்னும்

அங்கே உட்கார்ந்து கொண்டிருப்பது

போன்ற‌

ஒரு "ஹேலூசிஷனை"

என் நினைவு மண்டலத்தில்

ஒரு சிரிப்பு மூட்டமாய்

எழுப்பிக்கொண்டிருக்கும்படி

செய்த ஸ்ரீ தரின் 

அந்த அசுர சாதனைக்கு

எத்தனை விருதுகளை வேண்டுமானலும்

அபிஷேகம் செய்யலாம்.

____________________________________________

சொற்கீரன்



போதும்.

 போதும்.

___________________________


எதுகைகள் வேண்டும் என்பதற்காக‌

மோனைகளின் தலைகளைத்

திருகிக்கொள்வதா?

கவிதைகள் எழுத வேண்டும்

என்பதற்காக‌

அந்த பனைமரத்தின் உச்சியில்

போயா

நட்சத்திரங்களைப் 

பறித்துக்கொண்டிருப்பாய்?

காதலிக்க ஊறும் 

சுரப்பிகளுக்காக‌

பட்டாம்பூச்சிகளையா

"கஷாயம்"வைத்துக்குடிக்க‌

வெறி பிடித்துக்கொள்வாய்?

நானே எல்லாம்.

நானே பிரம்மம் மற்றும்

பிரபஞ்ச பைத்தியக்கார ஆஸ்பத்திரி

என்று சொல்லிக்கொண்டா

"ஸ்லோகங்களை"

கொப்பளித்துக்கொண்டிருப்பாய்?

முற்றி விட்டது.

போதும்.

போர்வைகளை வீசியெறி.

சோழிகள் குலுக்கிச் சொன்னது போதும்.

முட்டுச்சந்து வந்து விட்டது.

கடவுளை நீ காட்டியது போதும்.

எழுத்துக்கள் என்று 

அனக்கோண்டா குட்டிகளை

தினம் தினம் 

குஞ்சு பொறித்துக்கொண்டிருந்தது

போதும்.

பேனாவை முறித்துப்போடு.

_____________________________________________

சொற்கீரன்.

முப்பத்தேழு முகங்களில் ஒளிர்வான்கள்

 முப்பத்தேழு முகங்களில்  ஒளிர்வான்கள்

37 Dimensions Photons





Majorana 1 Quantum Chip Just CRACKED the Shocking Truth About Photons in 37 Dimensions

திங்கள், 21 ஏப்ரல், 2025

காகிதக்காடுகளாய்...

 காகிதக்காடுகளாய்...

___________________________________


புத்தகங்கள்

காகிதக்காடுகளாய்

நம் வழியெல்லாம்

சிதறி அடைத்துக்கொண்டு

இருப்பதாய்

ஒரு திருப்பம் நம் எதிரே

மூச்சு முட்டிக்கொண்டு

நிற்கின்றன.

மனித அறிவுப் பரிமாணத்தின்

பாதைக்கு 

இன்னும் இன்னும்

மைல் கற்கள் 

வேண்டும் வேண்டும்.

நம் தோள்மீது 

அமர்ந்து கொண்டிருக்கும்

புராணத்து சித்ரகுப்தன் கூட‌

கையில் 

மடிப்பொறியோடும்

ஏ ஐ சொடுக்கு சிட்டிகைகளோடும் 

தான் அப்பிக்கொண்டிருக்கிறான்.

நம் கற்பனை நமைச்சல்களுக்கும்

நம் முதுகு சொறிந்து விடும்

கவிதைத்தினவுகளுக்கும்

ரீல்கள் கணக்கில்

காகிதத்தீனிகள்

சவைக்கப்பட்டு சவைக்கப்பட்டு

குவிந்த‌

அச்சுக்குப்பைகள்

கோடி கோடி கோடி.

மனிதனே

நீ மிருகமாய் இருந்தபோது கூட‌

இப்படி

மரங்களைத் தின்றது

இல்லையே.

இப்போது உன் அசுரப்பசிக்கு

டிஜிடல்களும் க்யூபிட்களும்

நீண்டு கொண்டே போய்

மில்லியன் மில்லியன்

ஒளியாண்டுகளையும் கூட‌

"ஸ்நேக்ஸ் டைம்" கொறிப்புகளாய்

அல்லவா 

ஆக்கி விட்டிருக்கின்றன.

உன் பசி அப்போதும் 

அடங்க வில்லையே.

அந்த ப்ராக்ஸிமா எக்ஸோப்ளேமட்டில்

இருப்பதாய் கருதப்படும்

அந்த நீலவிழி ஏலியன் குஞ்சுகளுடன்

கும்மாளம் போடும்

அல்காரிதங்களில்

புதிய "அகர முதல"வை

தேடிக்கொண்டிருக்கிறாய்.

இந்த புத்தகங்கள் உன் எழுத்துகளின்

ஃபாசில்களை

புதைத்துக்கொண்ட‌

அடி வயிற்று மண் திட்டின்

சொப்பன‌ங்களாகவே

மக்கிக்கொண்டிருக்கட்டும்.

மயக்கம் என்ன எழுத்தாளனே.

"கிளிக்" பிரபஞ்சத்தில்

எங்கோ ஒரு கருந்துளைக்கு

வளையல்கள் மாட்டி

சிலிர்ப்பு கொள்!

களிப்பு கொள்.


_________________________________________

சொற்கீரன்