பொறி
_________________________
புட்டுக்கு மண்சுமந்தவன்
பிரம்படி பட்ட கதையையும்
பிரம்படிகள் வைத்தே
புகட்டிய ஆசிரியர்கள்
புழங்கிய "கல்வியில்"
வந்து புகுந்த
குவாண்டம் கணிப்பொறியில்
ஒரு பொறி வைத்து
பிடித்துக்கொண்டோம்
நம் கல்வி வெளிச்சத்தை.
அதன் ஊற்றுக்கண் திறந்த
ஆசிரியச்செம்மல்களே!
ஆயிரம் கோடி
வணக்கங்கள்! வணக்கங்கள்!!
______________________________________
சொற்கீரன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக