என் அருமை ஆசான்களே!
(உலக ஆசிரியர்கள் தினம்)
என் அருமை ஆசான்களே!
இந்த உலக தினம் எல்லாம்
உரை போடக்காணாது
நீங்கள்
நச்சரித்து நச்சரித்து
உரைத்த
அந்த நச்சினார்க்கினியரின்
உரைகள் முன்.
"பிரப்பம் பழம்" என்று
செல்லமாய்
கொட்டிக்கிடக்கும் அந்த
"பழமுதிதிர் சோலைகள்" எனும்
பள்ளிக்கூடங்களில்.
உள்ளங்கை வீங்க வீங்க
நீங்கள் தந்த கல்விச்செல்வம்
இன்றும் எங்கள் உள்ளங்களில்
சுழன்று கொண்டிருக்கும்
கலங்கரை விளக்கங்கள் தான்.
இந்த விழுப்புண்கள் பெறாதவன்
எப்படி
வாழ்க்கைச் செருக்களத்தில்
செருக்கோடு நிற்க முடியும்?
இன்று
கணிப்பொறிகள் எனும்
அனக்கொண்டா பாம்பு வாய்க்குள்
போய் மீளுவது தானே
டிஜிடல் கல்வி.
ஆசிரியப்பெருமக்களே
அந்த மலைப்பாம்புகள் (பைத்தான்) முன் கூட
மகுடி ஊதும் வித்தையை
கரைத்துப்புகட்டுகிறீர்களே.
செயற்கை மூளையின் கோபுரம்
எங்கோ ஒரு உயரம் காணாத
உச்சிக்கு போய் விட்டது என்கிறார்கள்.
நுனிக்கொம்பர் ஏறியும்
அஃதையும் இறந்து ஊக்கி
ஊக்கி ஊக்கி ஊக்கம் தந்து
பிரபஞ்சங்கள் யாவும்
அதே "உள்ளங்கையில்"
ஒளியேந்திக்காட்டும்
வல்லமை தருபவர்கள்
நீங்கள்..நீங்கள்...நீங்களே தான்.
_______________________________________
சொற்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக