கலைத்து கலைத்து...
_________________________________________
காதல் எனும்
ஒரு செயற்கையான
செப்பு விளையாட்டு
தந்த உந்துதல்
எனக்கு
எல்லா வானங்களையும்
வசப்படுத்திக்காட்டின.
கடல்கள் யாவையும்
கரைத்து கரைத்து
கரையும் காட்டின.
இன்ப உணர்ச்சியின்
அந்த மின்னல் கீற்றுக்கு
எத்தனை எத்தனை
துன்பியல் காடுகளுக்குள்
நுழைந்து கந்தல் ஆனேன்.
வாழ்க்கையை வாழ்ந்து தான்
பார்க்க வேண்டும்.
ஆனால் "காதலை"
இந்த பூங்குமிழியின் "மாடலில்"
கொஞ்சம் சில மணித்துளிகள்
ஊஞ்சலாடி மகிழ்ந்து
உணர்ந்து கொள்ளலாம்.
வெறும் அந்த
டாய் ஸ்டோரி செட்டை
கலைத்து கலைத்து
சேமித்து சேமித்து
மகிழ்ந்து கொள்வோம்
வாருங்கள்.
__________________________________________
சொற்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக