திங்கள், 8 செப்டம்பர், 2025

முதற்பொருள் எனும் ப்ரொடீன்

 “Truly A Reversal”: Scientists Find Protein That Causes Brain Aging, And Learn How To Stop It





முதற்பொருள் எனும் 

ப்ரொடீன்

நம் உரிப்பொருள் ஆகி

கருப்பொருள் ஆகும் 

உயிர்ப்பொருள் ஆகி

நம்மை அசைவிக்கிறது.

அதுவே

நம்மிடையே இருந்து

உதிர்பொருள் ஆகி

நம்மை முடிக்கும் பொருளும்

ஆகிறது.

முதலில் வாழ்க்கை என்பதற்கு

பொருள் ஆகி 

வயதுக்கும் பொருள் ஆகிறது.

வயதுகளை நகர்த்தும்

நுண் பொருள் ஆவது இதுவே

எனவும் கண்டுபிடித்து விட்டான் மனிதன்.

அந்த ஜெனடிக் கோடுகள் ஆன‌

டி என் ஏ ..ஆர் என் ஏ

சங்கிலியைக்கொண்டு

அதன் கண்ணிகளைக்

கூட்டியும் கழித்தும்

சூத்திரங்கள் கண்டு

நோய்களையும் தவிர்த்தான்.

அதே உரிப்பொருள்

வயதுகளை பின்னோக்கி நகர்த்தவும்

(வயதுகளையே கட்டுப்படுத்தும்)

உள்ள‌

நுண்ணியப்பாடுகளில்

நுழைந்திருக்கிறான்.

அதுவே இந்தக்கட்டுரை.

________________________________________

இபியெஸ்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக