"அகர முதல" வெளியெல்லாம்
"அகர முதல" வெளியெல்லாம்
"டி சிட்டர்" முதலே
பெருவெளியாம்...
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் தன் .......
ஈர்ப்புக்கோட்பாட்டு சமன்பாட்டில்
ஒரு "முட்டுக்கட்டை"
ஒன்றைச்செருகி வைத்தார்.
ஈர்ப்பின் எல்லையற்ற ஆற்றலில்
இந்த அகல் வெளி ஒரு மையத்தில்
ஒடுங்கும்போது
இந்தப்பெருவெளியே
"புஸ்வாணம்" ஆகி விடுமே!
அப்படி ஆகிவிடாமல் தடுக்க
பிரபஞ்ச வெளியின்
"ஒரு மாறிலி" அதை
தடுத்துக்கொண்டு நிற்கும்
என்றார்.
அதற்கு "டி சிட்டர்"
ஒரு கணித சூத்திர "வெளி"
ஒன்றை உருவாக்கினார்.
அதுவே டி சிட்டர் ஸ்பேஸ்.
இந்த "வெளி" உடைந்து போய்
"ஆண்டி சிட்டர் ஸ்பேஸ்"
உருவானால் தான்
இந்த பிரபஞ்சவெளிக்கு
எதிரான ஒரு "எதிர் வெளி"
உருவாகும்.
இது வெளியின்
வளைதன்மை (கர்வேச்சர்)யைப்
பொறுத்தே
அண்டவெளிகள் உருவாகும்.
நம் வெளியின் ஈர்ப்பு
நேர் வளைவு கொண்டது.
(பாசிடிவ் கர்வேச்சர்)
அதாவது கோளக வெளி.
இதற்கு எதிரான ஆண்டி டி சிட்டர் வெளி
"எதிர் வளை தன்மை" கொண்டது.
அதாவது
"பெரு வளைதன்மை" கொண்டது ஆகும்.
(ஹைப்பர் போலிக்")
நாம் ஒரு கேள்வியை இன்னும்
சுமந்து கொண்டிருக்கிறோமே?
"முட்டையா?
கோழியா?
எதிலிருந்து எது?
அதை இந்த
டி சிட்டர் வெளியும் (ஈர்ப்பினால் நேர் வளைவு)
ஆண்டி டி சிட்டர் வெளியும் (எதிர் ஈர்ப்பினால் எதிர் வளைவு)
தான் தீர்மானிக்கின்றன.
_______________________________________
இபியெஸ்
🌐 De Sitter space: a surprisingly simple explanation for the origin of our Universe
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக