வெள்ளி, 12 செப்டம்பர், 2025

மவுனம் பேசியதே.

 


மவுனம் பேசியதே.

__________________________________


கண்ணும் கண்ணும் பேசியது.

கடல்களின் அழம் தெரியவில்லை.

வாய்ச்சொற்கள் குழறின.

இனிய தமிழ் ஈப்ரு ஆனது.

மவுனம் நீண்டது..அகன்றது

அண்டவெளிகள் கூட‌

சிமிழுக்குள் அடைந்தன்.

என்ன தான் பேசினர்?

என்ன தான் பார்த்தனர்?

அருகே வேப்பமரத்துக் குயில்கள்

மொழி பெயர்த்தன்.

பூக்காரி இன்னும் வரவில்லை.

வந்தவுடன் 

ஒரு ரோஜாவை நீட்டி..

அவன் முடிக்க வில்லை.

அவள் 

பட்டென்று நீட்டினாள்

அவள் திருமணப் பத்திரிகையை.

எல் எல் எம் மாடலில்

ஏ ஐ வலையில் நானே 

பிடித்தது என்றாள்.

அந்த கண்ணி வலையோ

டிஜிடல் ஈரம் இன்னும் அங்கு 

சொட்டிக்கொண்டிருந்தது.

இவன் கண்கள் முட்டி நின்றது.

கண்ணீரின் கரை

தட்டி நின்றது.


__________________________________________

சொற்கீரன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக