வியாழன், 14 நவம்பர், 2024

ஐயன் வள்ளுவன்.

 


ஐயன் வள்ளுவன்

__________________________


தெற்குமுனையில்

எங்கள் அறிவின் கிழக்கு.

சொற்கள் உளிகளாகி

தமிழே சிற்பம் ஆனது.

குறு அடிகளில்

குமுறும் சிந்தனைகள்.

மானிடம் மட்டுமே

மையம் கொண்டது.

பிறப்புகளை

தர்ப்பைப்புல் கொண்டு

தடவிப்பார்க்கும்

மந்திரங்களின் தந்திரம்

தடம் புரண்டது

உன் வரிகளில்.

பிறப்பொக்கும் எவ்வுயிர்க்கும்

என்ற‌

சிறப்புக்கணித சமன்பாடு

செய்த முதல் விஞ்ஞானி நீ.

வள்ளுவன் தன்னை 

உலகினுக்கே தந்து

வாசல் திறந்த‌

குறட்ப்பாக்களில்

"அணுவைத்துளைத்து

 ஏழ் கடலைப் புகட்டி"

அமைத்ததொரு 

கல்பாக்கமும் 

நீயே தான்.

உன்னை இங்கு 

"குறளோவியம்" தீட்டிய‌

தூரிகையே எங்கள்

தமிழ் முழங்கும்

பேரிகையாம்!

நீ இங்கு கதிர்விரித்தால்

விண்வெளிப்புத்தகமும்

புதிய தோர்ப் பேரொளி

சுடரும்!சுடரும்!!

_____________________________________

சொற்கீரன்

புதன், 13 நவம்பர், 2024

யுகக்கவிஞனே!"

 

யுகக்கவிஞனே!"
_________________________________________________‍‍
சொற்கீரன்
காக்கையைப்பாடினாய்
காக்கைப்பாடுநன் எனும்
ஒரு சங்கப்புலவர் போல.
அது வெறும் பறவையா?
சமுதாயத்தை
ஆட்டி அசைக்கும்
கருப்புக்கொடியாய்
மனித சிந்தனைக்கு
அது சோறூட்டிய படலத்தை
ஒரு வியத்தகு யுத்த காண்டமாக்கினாய்
அந்தப்பாடலில்.
இப்போது
வயதுகளை வசைபாடுவதாய்
உன் சொல்லின் சோழிகளை
இலக்கியப்பிழம்பின் கூறுகளாக்கி
பல்லாங்குழி அல்லவா
ஆடியிருக்கிறாய்.
"யுகக்கவிஞனே"என‌
உன்னை அழைத்தால்
இந்த யுகம் கூட உச்சி குளிர்ந்து
உன் முன் கைட்டி வாய் புதைத்து
தனக்கு
ஒரு வாழ்த்துரைக்காக‌
உன்னிடம் "நேரம்" கேட்கலாம்.
அப்போதும் கூட‌
ஓடு ஓடு யுகமே ஓடு
அங்கே ஒரு வரலாற்று நிகழ்வு
கன்னிக்குடம் உடைத்து
கண் விழிக்க காத்திருக்கிறது
ஓடு ஓடு
என்றல்லவா விரட்டியிருப்பாய்!
"ஒப்பற்ற கவிஞனே"
வேறு ஏதும் சொல்லி
அழைக்கும் வலிமை
என்னிடம் இல்லை.
நீ எழுதிக்கொண்டே இரு.
அது போதும் எங்களுக்கு.
முறியாத பேனாவாய்
கசங்காத காதிதமாய்
இந்த விண்ணும் மண்ணூம்
உனக்கு எப்போதுமே
உன் கவிதைக்கு
ஏங்கி நிற்கும்!
___________________________________________
பார்த்து நடந்துகொள்!என்ற தலைப்பில்
13-11-2024 காலை 08.50 ல்
எழுதிய
ஈரோடு தமிழன்பன் கவிதை பற்றிய கவிதை இது.
______________________________________________
எல்லா உணர்ச்சிகளும்:
Sivasankaran Subramanian

செவ்வாய், 12 நவம்பர், 2024

உயிர்ச்சங்கிலி

உயிர்ச்சங்கிலி

_________________________________________________


உயிர்ச்சங்கிலியின் (ப்ரொடீன் ஃபோல்டிங்) உட்பொருளை ஏ ஐ மூலம் கண்டுபிடித்த 3 வேதியல் விஞ்ஞானிகளுக்கு 2024ன் நோபல் பரிசு கிடைத்திருக்கிறது.பாவம் கடவுள் ஒரு மூலையில் உட்கார்ந்து கொள்ளட்டும் என்று  மனித மூளையின் ஒரு மூலையில் வெட்டும் அறிவியல் மின்னல்களை இந்த விஞ்ஞானிகள் தங்கள் படைப்பின் அறிவு கொண்டு சாதனை ஆற்றியிருக்கிறார்கள்.

உள்ளே நுழைவோம் வாருங்கள்!

______________________________________________________சொற்கீரன்

Here is the LINK

Prizes for Research Using AI: Blasphemy or Nobel Academy's Genius - Sify

திங்கள், 11 நவம்பர், 2024

(ஒரு த்ரில்லர்)

 

வானத்திலிருந்து......

_____________________________________ருத்ரா

(ஒரு த்ரில்லர்)


ஓ மனிதா!

யார் என்னை கூப்பிட்டது?

திரும்பி பார்க்கிறேன்.

ஒருவருமில்லை.

திரும்பவும் கூப்பிட்டது.

யார்? யார்?

யார் யாரா?

நான் தண்டா.

திரும்பவும் பார்த்தேன்.

ஒருவருமில்லை.

குரல் என்னைக் கூப்பிட்டுக்கொண்டே 

வந்து வந்து விரட்டியது.

சடாரென்று திரும்பி

வேகமாக அந்த குரல் வந்த‌

திசையை நோக்கி ஓடி

அதன் மீது மோதிவிடலாம்

என்று ஓடினேன்.

ஓடினேன் ஒடினேன் 

ஓடிகொண்டே இருக்கிறேன்.

இப்ப்பொதும்

அந்தக்குரல்

என் பின்னாலிருந்து கேட்டது.

எப்படி அது

பின்னுக்குப்போனது.

சரி.

அப்படியே நிற்போம்.

என் மீது அந்தக்குரல் மோதட்டும்

என்று

நின்று கொண்டே இருக்கிறேன்.

என்ன விந்தை?

இப்போது அந்தக்குரல் மேலே எங்கோ இருந்து

கூப்பிட்டுக்கொண்டே

நீழே இற‌ங்குகிறது.


(தொடரும்)


பிரபஞ்சத்தின் மாய விசை


பிரபஞ்சத்தின் மாய விசை

_______________________________


இது இன்னும் எந்த கணிதசமன்பாடுகளுக்குள்ளூம் அடைபடவில்லை.இந்த ஒட்டு மொத்த பிரபஞ்சமும் ஒரு வாளியாக உவமை கொள்வோம்.அதில் நீர் நிரைத்து அதன் கைப்பிடியின் மையத்தில் கயிறு கட்டி

அதை ஒரு கையால் வலுவாக விரைவாக‌ சுழற்றுவோம்.அப்போது அந்த நீர் கீழே விழாமல் தாங்கிப்பிடிக்கப்பட்டு இருக்கும்.மேலே இருக்கும்போது அதன் மட்டம் கொஞ்சம் குழிவாக இடுக்கும்.

அப்படி குழி ஏற்படுத்தும் விசையும் நீர் கீழே விழாமல் தாங்கும் விசையும் என்ன விசை? இது மாய விசை.

இது "இனெர்ஷியா"எனப்படுகிறது.சர் ஐசக் நியூட்டன் இதிலிருந்து தான் அந்த உலகப்புகழ் பெற்ற 3 விசை விதிகளை கண்டுபிடித்தார்.அந்த மாயவிசையின் அடிப்படையே எல்லா இடத்திலும் நிரம்பியுள்ளது."மாக்"எனும்

அறிவியல் மேதை இந்த பிரபஞ்சத்தின் "சுற்றுச்சூழல்"(என்விரோன்மென்ட்) விசையே எல்லா இயக்கங்களுக்கும்

(டைனாமிக்ஸ்) காரணம் என்கிறார்.





 

0310-0320


ஆழ்நிலை...



ஆழ்நிலை...
______________________________
.

வானம் வெளுத்துவிட்டது.
ஆம்
அதன் சாயம் வெளுத்து விட்டது.
விடிகிற மாதிரி விடிவதும்
மேற்கில் போய் விழுகிற மாதிரி
விழுவதும்
அதெல்லாம் வெற்று வாடிக்கை
ஆகி விட்டது.
இப்படி இருட்டையும் வெளிச்சத்தையும்
அள்ளிப்பூசிக்கொண்டு
அது என்ன சொல்ல வருகிறது?
நான் ஒன்றும் சொல்ல வரவில்லையடா
நான் அவ்வப்போது ஆடை மாற்றி
வீசிஎறிவதை ஏண்டா
உற்றுப்பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள்?
இங்கே எல்லாமே
வீசி எறியப்பட்ட குப்பைகள்.
உங்கள் கடவுள்களையும் சேர்த்து தான்
சொல்கிறேன்.
உங்கள் மண்டைப்புழுக்கள் 
செய்கிற வேலை அது.
அதன் குடைச்சலும்
அதன் குதியாட்டங்களும்
உங்களை இப்படி
குத்தாட்டங்கள் போட வைக்கிறது.
மொத்தப்பிரபஞ்சமே
எவனோ
எதுவோ
காறி உமிழ்ந்தது தான்.
ஒளியும் இருளுமாய்
அவையே
ரத்தமும் சத்தமுமாய்
....
என்னவோ சொல்லிக்கொண்டே
போனது.
நீ வேறு நான் வேறு இல்லை.
இது என்ன?
இது எதற்கு?
இது எப்படி?
இன்னும் அந்தக்குரல்
அடுக்கிக்கொண்டே போகிறது.
...
.........
போதும் இன்றைக்கு.
யோகா என்கிற அந்த‌
பிராந்தி பாட்டில் கடைசிச்சொட்டையும்
கவிழ்த்து விட்டது.
இனி அப்புறம் பார்ப்போம்.

__________________________________________‍‍‍‍‍
கல்லாடன்
10.11.2024