செவ்வாய், 4 டிசம்பர், 2018

பிரம்ம சூத்திரம் எனும் ஒரு நாத்திக சூத்திரம்

பிரம்ம சூத்திரம் எனும் ஒரு நாத்திக சூத்திரம்
===========================================
ருத்ரா இ பரமசிவன்


வேதம் என்பது ஒலிகள்.இதை சுருதி என்பார்கள்.முதன் முதலாய்
யார் செவியில் விழுந்ததோ அதைப்பற்றிய விவரம் சரியாக தெரியவில்லை.முதன் முதலில் யார் நாவு அதை ஒலித்ததோ அதுவும் சரியாக சொல்லப்படவில்லை.ஏனெனில் வேதம் மனித நாவினால்
ஒலிக்கப்படவில்லை.அப்படி ஒலிக்கப்பட்டால் அது எச்சில் ஆகி விடும்.
அது தீட்டு ஆகிவிடும்.அதனால் வேதங்கள் வானத்திலிருந்து ஒலிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதே வேத அபிமானிகளின் கருத்து.
வேதம் என்பது அறிவு.அறிவு என்றால் எல்லோராலும் அறியப்பட வேண்டியது என்று தானே பொருள்.அறிதல் என்பது கேள்வி அதாவது
"ஒலிப்புகளை" கேட்டல் என்றும் எதையும் ஏன் எப்படி என்று வினாக்கள் தொடுத்தல் என்றும் பொருள்.தமிழில் அறிவு என்பது இத்தகைய கேள்வி தான்.இந்த முறையில் மனிதன் தன்னையும்
தன் சூழலை (இயற்கை)யும் அறிகிறான்."கேள்,கல்" என்ற இரு
"பகுதி"(உறுப்பிலக்கணத்தின் படி)ச் சொற்களைக் குறிப்பதாகும்.
இப்படி "அறிவு" கேள்வி கல்வி (கேள் கல் எனும் வினைகளின்)
எனும் பெயர்ச்சொற்களாகி தமிழில் வழங்கப்படுவது ஒரு சிறப்பியல் கூறு ஆகும்.ஆனால்  வேதம் என்பது தமிழில் "மறை" அதாவது "சொல்லாமல் மறைத்துக்கொள்"என்று பொருள் படும்படி தான்
வழக்கில் உள்ளது.இது ஏன்?
நான்கு வேதங்கள் எனும் நான்கு வகை அறிவுப்பாடுகள் ஏன்
"மறைபாடுகள்" ஆகி நான்மறை என அழைக்கப்படுகிறது.?






பெண்ணே !


பெண்ணே !
=============================================ருத்ரா.


உனக்கு
ஒரு கவிதை எழுதினேன்.
உன் வளையலையும்
மல்லிகைப்பூவையும்
தாண்டி
எந்த எழுத்துக்களும் நகரவில்லை.
உன் குங்கமப்பொட்டில்
தொட்டு தொட்டு எழுதினேன்.
யாருக்கும் எளிதில்
மசியாத உன் மசியைத் தொட்டு
எழுதினேன்.
திடீரென்று
உன் மனம் தோட்டவன் என்று
ஒரு வானம் கிடைத்தது
உனக்கு.
தினம் தினம் உனக்குள்
மின்னல் வெட்டி
அந்த ஒளியிழைக்குள்
நீ ஒளிந்து கொண்டாய்.
உன் கண்சிமிட்டல்களில்
மில்லியன் பட்டாம்பூச்சிகளின்
பூங்காவனம் புகுந்து கொண்டது.
கையளவு உள்ளத்தில்
கடல் அளவு ஆசை.
ஆம்
அவை அலையடிப்பது
அந்த எண்களில் மட்டுமே.
அந்த எண்களே அவன் கண்கள்.
அந்த எண்களே உன் கண்கள்.
கண்கள் பொத்தி பொத்தி ...
அல்ல
கண்கள் ஒத்தி ஒத்தி ...
கண்ணாமூச்சி ஆட்டம் துவக்கி விட்டீர்கள்.
அதற்கு இடம் இல்லை. தடம் இல்லை.
வேலி இல்லை.கதவு இல்லை.
கடிகாரம் தன் முட்களையெல்லாம்
முறித்துப் போட்டு விட்டது.
காலத்தையும்
ஒரு காலன் வந்து
விழுங்கிவிட்டது போல்
நேரம் காலம் எல்லாம்
அங்கே மூளியாகி விட்டது!
பளப் பள வென ஃ போம் லெதர்
அட்டையை சட்டையாக
அணிந்திருக்கும்
இந்த ஜன்னலில்
ஆயிரம் பிரபஞ்சங்கள் பிதுங்கி
வழிந்தன.
பஞ்சு மிட்டாய் மேகங்கள்
முகத்தோடு வந்து
வருடிசென்றன இனிய கனவுகளாய் !
பெண்ணே !
உனக்கு கவிதை எழுத
இப்போது எதுவும் தேவையில்லை.
அந்த "செல்ஃ போன்" தான்
இனி எல்லாம்.
அந்த "உள்ளங்கை"கள் எல்லாம்
இனி உங்கள் "உள்ளங்களே".

ஒரு நாள்
விரல்களால்
அவன் கன்னம் வருடினாய்
ஆம்
அவன் எண்களை .....
அவனும் தான் ..
அந்த எண்கள் எனும்
உன்  கண்களுக்கு
அவன் செவியால்
முத்தமிட்டான்.
............................
............................
அவன் வந்த "மோட்டார் பைக்குடன்"
ஒரு கனரக வாகனமும்
கனமாய்
ஒரு முத்தம் கொடுத்துவிட்டது.

அவள் கைபேசியில்
அந்த "அசுர கணங்கள்"
ரத்த எச்சிலாய்
ஒளி உமிழ்ந்தது.
ரிங் டோனில்
"மரண மாஸ்.."
"காளியாட்டம்"ஆடிக்கொண்டிருக்கிறது.

=======================================================














திங்கள், 3 டிசம்பர், 2018

அன்பான ரஜினி அவர்களே.


அன்பான ரஜினி அவர்களே.
=========================================ருத்ரா


மறுபடியும்
"வெற்றிடக்கூச்சலை"
துவங்கி விட்டீர்கள்.
"அவன்"
தூணிலும் இருப்பான்
துரும்பிலும் இருப்பான்
என்ற
உங்கள் ஆத்மீகம்
அரசியல் என்று வரும்போது
அந்த "வெற்றிடத்தைக்"குறி வைப்பதன்
உட்குரல் என்ன சொல்லுகிறது?
நாட்டின் அந்த‌
"பலசாலிக்கு"
ஒரு நாற்காலி போட்டுக்கொடுக்கும்
நன்றியையா?
நன்றியா? எப்படி?
என்று நீங்கள் கேட்பது புரிகிறது.
உங்கள் ஆத்மீகத்துக்கும்
அந்த "வேதாந்தத்துக்கும்" தான்
ஒரு முடிச்சு இருக்கிறதே!
தாமிரம் உருக்கும் அந்த ஆலை
தமிழர்களுக்கு
ஒரு "எலும்புருக்கி"நோய் ஆகிப்போனது.
பொருளாதாரம் என்ற பெயரில்
நாட்டின் வளமே சூறையாடப்படும் போது
நாடே சுடுகாடு ஆகும் என்பதை
நீங்கள்
உங்கள் கல்லா கட்டும் பாணியில்
சொன்னீர்கள்.
போராட்டம் போராட்டம் என்று
போராடிக்கொண்டிருந்தீர்கள் என்றால்
தமிழ்நாடு சுடுகாடு ஆகும் என்றீர்களே!
அதில் தான்
உங்கள் "வெற்றிடத்தின் வேதாந்தம்" புரிகிறது.
எங்கள் கனிவான அன்பிற்குரிய‌
ரஜினி அவர்களே.
வெற்றிடத்தின் விஞ்ஞானம்
உங்களுக்கு புரிந்திருக்கும் என‌
நினைக்கின்றேன்.
இத்தாலியில் "டாரிசெல்லி" என்ற
விஞ்ஞானி
இரண்டு சிறிய "அரைக்கோள"
கிண்ண வடிவ அமைப்புகளை பொருத்தி
அதனுள்ளே
காற்றை எல்லாம் உறிஞ்சி
உள்ளே ஒரு "வெற்றிடம்" உருவாக்கினார்.
அந்த கிண்ண அமைப்புகளின்
இரு முனைகளிலும்
ஏழெட்டுக்குதிரைகளைப்பூட்டி
எதிர் எதிர் திசையில்
அவற்றை ஓடி இழுக்கச்செய்தார்.
அந்த கிண்ணங்களை
அந்த குதிரைகளால் பிரிக்கவே முடியவில்லை.
ஆம்.
சூழ்நிலையின் அழுத்த ஆற்றல்
அந்த கிண்ணங்களை
சூழ்ந்து அமுக்கிக்கொண்டு விட்டது.
அந்த "டாரிசெல்லி"வெற்றிடம்
இங்கே அடை படுவது
மக்கள் எழுச்சிகளால் தான்.
நீங்கள் அஞ்சும்
கஜா புயல்களின் கரு மையம்
அந்த வெற்றிடத்தில் தான்
கன்னிக்குடம் உடைக்கிறது.
அதனால் இந்த வெற்றிடம் பற்றி
நீங்கள்
கவலை கொள்ளத்தேவையே இல்லை.
சமுதாய முரண்பாடுகளே
இங்கு சித்தாந்தம் ஆகிறது.
அதுவே அரசியல் ஆற்றலின்
கரு மையம்.
அந்த வெற்றிடத்தில் கர்ப்பம் தரிப்பது
தமிழ் நாட்டில்
தமிழ் மக்களால்
கருவுயிர்க்கப்படும் போராட்டங்களே தான்.
அது தமிழைக் காப்பதற்கும் இருக்கலாம்.
அது திராவிடத்துக்கும் இருக்கலாம்.
இடை மறிப்பாய் உங்கள்
லஞ்ச லாவண்ய பையாஸ்கோப்புகளை
 "ஃபிலிம்"காட்டுவதில்
எந்த அர்த்தமும் இல்லை.
சமுதாய எழுச்சியின் அலைகளில்
அவை நிச்சயம் கழுவப்பட்டுவிடும்.
சில நீரவ் மோடி களின்
சட்டைப்பாக்கெட்டில் நம் வங்கிகள்
விழுங்கப்பட்டு விட்டனவே.
அந்த சமூகச் சுரண்டல்களின்
அநீதி உங்களுக்கு ஏன் புரியவில்லை?
ஆத்மீக ஆர்ப்பாட்டத்தில்
ஆண்டவனுக்கு
கும்பாபிஷேகம் பண்ணுவது கூட‌
லஞ்ச வடிவத்தின்
விஸ்வரூபம் தான்.
அந்த தந்திர யோகங்கள்
போதனை செய்ததே இந்த‌
சுயலாப புகைமூட்டங்கள் தான்.
சாதி மதங்கள்
அதனை முட்டுக்கொடுக்க‌
வந்தவை தான்.
இதை வெளிச்சம்  போட்டுக்  காட்டும்
பகுத்தறிவு கூட‌
"தேசவிரோதம்"
என்று தெறிக்கவிடும் கும்பல்களுக்கு
நீங்கள் குடைபிடிக்கும்
சதிகளில் சிக்கிவிடாதீர்கள் என்று
எங்கள் அன்பான ரஜினி அவர்களே
உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
உங்கள் "பேட்ட"த்துள்ளல்களில்
ஒரு ஆன்மீக ஐயப்பனின்
நிழல் உருவம் செய்து
அந்த வெற்றிடத்தை நிரப்பும்
வேலையில் மெனக்கிட வேண்டாம்
எங்கள் அன்பான ரஜினி அவர்களே!
பரமண்டலம் எனும் அறிவியல் வெளியில்
ஒரு காவிமண்டலத்துக்கு
கால் கோள் விழா நடத்துவது
உங்களுக்கு உகந்தது அல்ல.
"சோசியல் டைனாமிக்ஸ்"க்கு
மஞ்சள் குங்குமம் வைப்பதும்
உருத்திராட்ச மாலை
போட்டுக்கொள்வதும்
எங்கள்
தமிழ் இளைஞர்களுக்கு உரித்தானது அல்ல!
என்பதை புரிந்து கொண்டு
இந்த "வெற்றிட"ப்பாராயணத்தை
நிறுத்திக்கொள்ளுங்கள்
என்று
மீண்டும் மீண்டும்
கேட்டுக்கொள்கிறோம்
அன்பான ரஜினி அவர்களே.

======================================================
















மெழுகு சிலைக்குள் "அய்யா" விஜயசேதுபதி.

மெழுகு சிலைக்குள் "அய்யா" விஜயசேதுபதி.
====================================================ருத்ரா


மெழுகுசிலைக்குள்
அய்யா இருக்கிறார்.
அய்யாவுக்குள்
இருக்கும்
சீதக்காதி எதில் இருக்கிறார்?
கதையிலா?
நடிப்பிலா?
தர்மத்தை கவ்விய சூது
இன்னும்
தர்மத்தை விடவில்லை போலும்.
அதற்குத்தான்
கையில் அந்த வில்லும் அம்புமாய்
அய்யா எனும் நாடகக்கலைஞராய்
வரப்போகிறாரோ?
ஏதோ
இந்த திரைக்குள் திரையாய்
ஒரு முகம் காட்டி
அந்த நரம்பு முடிச்சுக்குள்
என்ன புதிர் அவிழ்க்கப்போகிறார்?
அந்த தடித்த கருப்பு ஃப்ரேமுக்குள்ளிருந்து
கனல் கண்களின் கதிர்வீச்சை
இந்த மெழுகு தாங்குமா?
அந்த நரைத்த தலைக்கிரீடத்துடன்
நடிப்புக்கலையின் இந்த‌
மன்னன் எப்படி ஆளப்போகிறார்
இந்த "பாக்ஸ் ஆபீஸ்" ராஜ்யத்தை?
நம் ஆவல் சூடேறிக்கொண்டே போகிறது.
சீதக்காதி என்ற பெயரில்
ஒரு அற்புத வரலாற்றுக்களஞ்சியம்
கவிந்து கிடக்கிறது
அவர் நடிப்புக்கு ஒரு கருவூலம்
அதில் கிடைக்கலாம்.
96ல் ஒரு "ஊமைக்காதல்"
பேசாமல் பேசிய காவியங்களை
நாம் அறிவோம்.
சமாதி பிளக்கட்டும்
அந்த மோதிரம் வெளியே வந்து
ஒரு வெளிச்சம் காட்டட்டும்.
அந்த மெழுகுக்குள்ளிருந்து
ஏதோ ஒரு அஜந்தா சிற்ப அதிசயம்
உருகிக்கசியலாம்.
இல்லை
திடுக்கிடும் எரிமலை வீச்சுகள்
பிதுங்கி வழியலாம்.
அந்த தொள தொள சட்டைக்குள்ளிருந்து
கந்தல் ஆகிக்கிடக்கும்
சமுதாயத்தைப் புரட்டிப்போட்டு
அதற்கு புத்தாடை அணிவிக்கும் கனவு
ஒன்று புறப்படப்போகிறதா?
அந்த கச்சாஃபிலிமின் கதைச்சிப்பத்தில்
வீசுவது
புத்த வாடையா?
ரத்த வாடையா?
காத்திருப்போம்.
இன்னும் சில நாள் தானே!

====================================================






கல்பெயர்த்து இழிதரும்

கல்பெயர்த்து இழிதரும்
=================================ருத்ரா இ பரமசிவன்.

கல் பெயர்த்து இழிதரும்
இமிழ் இசை அருவி
புல்லோடு ஆங்கு பழனம் தழீஇ
பச்சை படர்த்தி பகலவன் தீவிழி
அவிப்பக் குளிரும் நீர் விரி பரவை
நெடுநல் நாட!அஃது மன் அன்று
உள் ஊறு தண்புயல் கண்புயல் படர‌
அடுதுயர் தந்தனை வெஞ்சுரம் ஏகி.
நீர்ச்சுனை தீச்சுனை போலும் நிழலும் வேகும்
அழல்நுரை அள்ளி அன்னமும் கலங்கும்.
ஐய நின் துழந்த பிரிவின் கொல் துயர்
பொய்த்தீ பற்றி பொல்லாங்கு செய்யும்.
மைபொதி வானும் புள்நிரல் பொலிவும்
இடி உமிழ்பு கண்டு நடுக்குறு செய்யும்.
துடி அன்ன அதிர்வில் புல்லிய தும்பி
வலைச்சிறைக் கண்ணும் அழியச்சிதையும்.
முற்றிய கழையைப் பற்றி நெரிக்கும்
தூம்பின் நீள்க் கை நெம்பு தரும் வேழம்.
யானும் முறிபடும் உயிர் நரல் கேட்டிலை.
நாஞ்சில் கவ்விய கொழுஞ்சினை கயல்படும்
துடிப்பும் அறியலை உயிர் நூல் கோத்து
உலுக்கிச் செகுக்கும் ஊசியோடு அழியும்
ஆவியும் கண்டிலை ஆர்கலி மாவொடு
தழுவினையாக ஆற்றொடு போகி
ஐந்தும் மறந்தனை எத்திணையாயினும்
அத்திணை ஈண்டு அருகுமின் விரைமின்
நெடுவேல் அன்ன மாவின் தளிராய்
அளியேன் மாதோ விதிர் விதிர்ப்புற்றே.

===========================================

ஞாயிறு, 2 டிசம்பர், 2018

அவனது "யுனிவெர்சிடி எக்ஸாம்"

அவனது "யுனிவெர்சிடி எக்ஸாம்"
=========================================ருத்ரா

"நீ யார்?

ஏன் என்னைப்பார்த்தாய்?

என்ன கேட்க விரும்புகிறாய்?

உன் கண்கள்
என்ன யூனிவர்சிட்டி எக்ஸாம் பேப்பரா?

உனக்கு சிரிக்கவே தெரியாதா? "

"இந்த ஐந்து கேள்விகளை
குறித்துக்கொள்ளுங்கள்.
இவை கண்டிப்பாக "எக்ஸாமில்" வரும்.
பேராசிரியர்
வகுப்பு முடித்து சென்று விட்டார்.

அவன் கனவு கலைந்து
திடீர் என்று நினைவு தட்டியபோது
குழம்பினான்.

"எந்த அந்த ஐந்து கேள்விகள்?"

===============================================


சனி, 1 டிசம்பர், 2018

துப்பாக்கிகளின் பஞ்ச் டையலாக்

புதிய போஸ்டர்:


நன்றி: OneIndia Tamil  dated 01.12.2018

Read more at: https://tamil.filmibeat.com/news/marana-mass-thalaivar-kuthu-petta-first-single/articlecontent-pf87633-057146.html



துப்பாக்கிகளின் பஞ்ச் டையலாக்
================================================ருத்ரா

"அசையாதே
அப்புறம் அசைவதற்கு
நீ இருக்க மாட்டே "

துப்பாக்கி நீட்டியவரின்
வசனமாக இருக்குமோ?

"ஒரு துப்பாக்கி என்ன‌
நூறு துப்பாக்கி நீட்டினாலும்
குண்டுகள்
உன்னைத்தான் துளைக்கும்"

துப்பாக்கி நீட்டப்பட்டவர்
பேசும் "பஞ்ச்" ஆக இருக்கலாம்.

"எந்த ஊர்ல இருந்து நீ
வந்தாலும்
இப்ப நீ போற ஊர்ல இருந்து
திரும்பமாட்டே."

இது துப்பாக்கி நீட்டியவர்.

"ஹஹ் ஹஹ ஹா"
கண்ணா!
வெத்லப்பேட்டை
நெல்லுப்பேட்டை
சந்தப்பேட்டை
சவடாலு இல்ல நான்.
......
நான் பேட்ட..
உத்துப்பாரு
நான் கோட்ட.."

துப்பாக்கியையும் கணோம்.
துப்பாக்கி நீட்டியவரையும் காணோம்.
துப்பாக்கிகள்
சிகரெட்டுகளாய் மாறி
மேலே பறந்து கீழே வந்து
இவர் உதட்டோரம்
கப்பென்று
நங்கூரம் பாய்ச்சி நின்ற‌
ஸ்டைலே ஸ்டைலு தான்.
=======================================================
மேலே படம் மாத்திரம் "பேட்ட"
மற்றதெல்லாம் கற்பனைப் "பஞ்ச்"கள்!
========================================================