திங்கள், 11 டிசம்பர், 2017

பாரதி

பாரதி
==============================ருத்ரா

பாரதி!
நீ முண்டாசா?
முறுக்கு மீசையா?
வீரம் சுடரும்
வேங்கை விழிகளா?

"மங்கிய தோர் நிலவினிலே..."
நீ கனவு கண்டதை
காதலோடு இசை பிசைந்து
நாங்கள் ருசித்தது உண்டு.

"சிந்து நதியின் மிசையினிலே"
இந்தியாவின்
ஒற்றுமைச்சித்திரம்
நீ தீட்டிக்காட்டியும்
தமிழ்
இங்கே சில சனாதனிகளிடம்
"மிலேச்ச பாஷையாக" அல்லவா
இருக்கிறது.

இவை
உனக்கு எப்போதும் அரண்
என்று
அப்போது முழக்கிச்சென்றாயே
ஆம்
அவை
அப்போதும்
இப்போதும்
எப்போதும்
எங்களுக்கு நல் அரண் தான்!

விடுதலை விடுதலை விடுதலை!
விடுதலை விடுதலை விடுதலை!!

======================================

ஞாயிறு, 10 டிசம்பர், 2017

கல்லென் றவ்வே கதழ் பரித்திலையே

கல்லென் றவ்வே கதழ் பரித்திலையே
===================================================ருத்ரா

கடிமனைக் கூடல் அடைதெரு நாப்பண்
ஆவும் கன்றும் நடுநா நடுங்க
முரல்வன கேட்டு ஒளிநுதல் விதிர்ப்ப‌
அவல் படுத்தன்ன மிசை படுத்தன்ன‌
வியன் நகர் தோறும் கடுமா கலிப்ப‌
குளம்படி சீழ்த்த புண்படு பாங்கின்
மறுங்கிடை போன்ம் அளிந்தனன் ஆங்கே.
முள்மரம் கொல்லும் முளியிருள் ஆறு
கடாஅத்த நன்னன் எத்தை ஊரும்?
பாழ்த்த முன்னூறு பாரியின் ஊர்கள்
கல் புலம்ப புல் பலம்ப‌
புள்ளும் அரு நிழல் தேடி அலம்ப‌
படுதுயர் மகளிர் வெங்கணீர் வடிப்ப‌
அற்றைத்திங்களும் இற்றைத்திங்களும்
சுடுநீர் மழையென ஓவாது ஆகி
மெல்லுயிர் அவிதரு  கொடுநிலை தழீஇ
களிற்றடியன்ன  ஒருகண் அகல் பறை 
அறை தொறும் அறை தொறும்
அதிர் பட்டாங்கு நலிந்தனன் என் கொல் ?
பல்லியம் இயன்றன போலும் பல்குரல்
கேட்டனம் .கேட்டனம்  ஆயினும்
அவன் தேர் இரட்டும் படுமணி கேட்டிலம்.
கல்லென்றவ்வே யவன் கலிமா ஞான்றும்
கதழ் பரித்திலையே !கதழ் பரித்திலையே !

===================================ருத்ரா இ பரமசிவன்.

தலைவி தலைவன் வரும் தேரின் ஒலி கேட்க ஏங்கி
காத்திருக்கிறாள்.அவள் படும் பிரிவுத்துயரைபற்றி
நான் எழுதிய சங்க (நடைப்)பாடல் இது.

(பொழிப்புரை தொடரும்)

=======================================================








அண்ணே ..அண்ணே (2)

அண்ணே ..அண்ணே (2)
=========================================ருத்ரா


செந்தில்

"அண்ணே ..அண்ணே  ஒரு முக்கியமான விசயம் ..."

கவுண்டமணி

"சீக்கிரம் சொல்றா ."

செந்தில்

"அண்ணே  நான் நட்சத்திர பேச்சாளரா போகப்போறேண்ணே ..கட்சிக்காரங்க கூப்பிட்டிருக்காங்க..."

கவுண்டமணி

"இதப்பார்ரா! உன்னையா கூப்பிட்டுருக்காங்க? மேடையிலே என்னடா பேசுவே ?"

செந்தில்

"நான் வேட்பாளரு பிறந்த நட்சத்திரம்  அவரு ராசி அவரு கிரக தசை
இன்னும் இன்னும்..."

கவுண்டமணி

"அடேய் ..அடேய் ...."

செந்தில்

"இன்னும் அவருக்கு பிடிச்ச சினிமா நட்சத்திரம் ....எனக்கு  பிடிச்ச சினிமா நட்சத்திரம்.."

செந்தில்

"டேடேடேய்ய்ய் ...மவனே ..இதுக்குமேல பேசினே ..
ஓட்டுப்பெட்டிதலையா....ஓடிப்போய்டு ...."

(செந்தில் தலை தெறிக்க ஓடுகிறார்.)

----------------------------------------------------------------------------------
(சும்மாச்சுக்கும் நகைச்சுவைக்காக...)












கார்ட்டூன்

கார்ட்டூன்
========================================================ருத்ரா

    தோற்றுக்கொண்டே ஜெயிக்கும் குதிரை.


குறையொன்றுமில்லை கண்ணா!

குறையொன்றுமில்லை கண்ணா!
===================================ருத்ரா இ பரமசிவன்

"குறையொன்றும் இல்லை கண்ணா"

வழக்கம்போல் நாங்கள்
எருமை மாடுகள் மேய்க்கின்றோம்.
சாணி குவித்து
சுவரில் அசோக சக்கரங்கள் போல‌
வறட்டி தட்டுகின்றோம்.
சாணி நாற்றமே எங்கள்
சாம்பிராணி பத்தி வாசனைகள்.
சுரண்டுபவர்கள்
சுருதி குறையாமல்
சுத்த "வர்ணமெட்டில்" பாட்டு பாடி
சுரண்டிக்கொண்டு தான் இருக்கிறார்கள்.
மலைகள் காணவில்லை
கிரானைட்டுகளாக்கி
தின்று தீர்த்து ஏப்பம் இடுகிறார்கள்.
ஆறுகள் காணவில்லை.
தண்ணீர் எல்லாம் கேன்களுக்குள்.
இந்த கொள்ளைக்காரர்களின் வீடுகளில்
காசு மழை.
கரன்சி வெள்ளம்.
பொறியியல் மருத்துவக்கல்லூரிகள் எல்லாம்
லட்சம் லட்சம் லட்சங்களாய்
பணம் தின்னும் முதலைகளின்
பெரிய பெரிய கிட்டங்கிகளாகின.
ஆற்றைச்சுரண்டும் மணல் லாரிகள்
கருப்புப்பண சுரங்கங்கள்.
கண்ணுக்குத்தெரியாத ஸ்விஸ் பேங்குகள்.
அஞ்சோ பத்தோ
கிடைக்கிறத வாங்கி கிட்டு
எங்களையே அடிமாடுகளாய் ஆக்கி
காத்து நிக்கிறோம்
அடுத்த தேர்தல் கசாப்புக்கு.
மற்றபடி
குறையொண்ணுமில்லை கண்ணா!
அவர்கள் வீட்டில்
கிருஷ்ண ஜயந்தி பட்சணங்களுக்கும்
குறையொன்றுமில்லை கோவிந்தா !
கண்ணா! மணி வண்ணா!
உன் யமுனா நதி தீரமும்
இந்தியாவின் மொத்த சாக்கடையாய்
கூவத்து நாற்றத்துடன்
கூக்குரல் இட்டு குப்பைகளோடு
பஜனை செய்த உன்
பக்தர்களால் மாசு பட்டு போனதே!
இந்த "கம்சர்களே" உன் "கீதையை"
இங்கு எழுதுகின்றார்களே கண்ணா.

"குறையொன்றும்....."

அதற்கு மேல் கீதம் கேட்க முடியவில்லையே!
நீல வண்ணக்கண்ணா!
உன் புல்லாங்குழல் கூட அடைத்துக்கொண்டதே
அந்த சாக்கடையால் கண்ணா!

=======================================================
26.08.2016ல் எழுதியது.

சனி, 9 டிசம்பர், 2017

நகைச்சுவை



நகைச்சுவை 
========================================ருத்ரா 

மாணவன் 

எங்க ஆசிரியரை நீங்கள்  "சைபர் க்ரைமில்" உடனே அர்ரெஸ்ட் செய்யவேண்டும்.

காவல் அதிகாரி.

ஏன் ? என்னாச்சு ?

மாணவன் 

பின்னே என்னங்க. எப்ப பார்த்தாலும் "மேத்ஸ்" டெஸ்டில் 
எனக்கு "சைபர்" தான் போடுறாரு.

=============================================================

மூவர் உலா

மூவர் உலா
=================================ருத்ரா

ஒட்டக்கூத்தர்
எனும் புலவர் அன்று
எழுதினார்
மூவர் உலா.

இன்று
ஓட்டுக்கூத்தர்கள்
உங்களை
வரவேற்று
எழுதுகிறார்கள்.

கமல்
ரஜனி
விஜய்
அவர்களே!

என்ன செய்யப்போகிறீர்கள்
இந்த தமிழ் நாட்டை!
உங்கள் கையில்
செங்கோல் திணிக்க‌
இந்த‌
பால் குட செட்டிங்
படைகள் தயார்.

உங்கள் குத்தாட்டங்கள்
போதும் என்று
இவை உங்களுக்கு
வாக்குச்சீட்டுகளால்
குடமுழுக்கு செய்து
உங்களை
புனிதப்படுத்தத் தயார்.

உங்கள்
பஞ்ச் டையலாக்குகளே
அவர்களின்
வேத வேதாந்தங்கள்.

லாபம் குவித்து
மனித வள‌ங்கள்
உறிஞ்சப்படும்
கள்ளத்தனம் அலையடிக்கும்..
இந்த பொருளாதாரத்தின்
கருங்கடலை
உழைப்பவர்களின்..
இந்த உலகைப்படைப்பவர்களின்..
வியர்வை ஒன்றே
தூய்மைப்படுத்தும்
என்ற உண்மை
தன் இமைகளை
உயர்த்தும் வரை
சினிமாவுக்குள் சினிமாவாக‌
சமுதாயத்தின் இந்த‌
காக்காய் வலிப்புகளே
வலம் வரட்டும்.

தூரத்து "விடியல்கள்"
இங்கே வந்து சுட்டெரிக்கவா
போகிறது
என்று
இந்த மத்தாப்புகள்
ஈயம் பித்தாளை வெளிச்சங்களை
இளித்துக்கொண்டே தான் இருக்கின்றன.

மனித வரலாற்றை
மீண்டும் மண்ணுக்குள்
புதைக்க வரும்
அந்த சாதி மத அரக்கர்களை
வதம் செய்ய‌
நாம் ஏதாவது
ஒன்றை செய்தாக வேண்டும்

இந்த மத்தாப்பு
பூதங்களைக் கொண்டு
அந்த இருட்டுவேதாளங்களை
அடித்து விரட்டும்
"அறம்" ஒன்றே
நம் வழி!
ஆம் நிச்சயம்
அது
நம் தனி வழி தான்.

============================================