சனி, 18 பிப்ரவரி, 2017

மிக்சர் திங்கலாம் வாங்க!


மிக்சர் திங்கலாம் வாங்க!
======================================ருத்ரா

கூம்பு வடிவத்தில்
காகிதம் சுருட்டி
அதில் மிக்ஸர் நிரப்பி
கடைக்காரன் தந்ததை
தின்று கொண்டே
பார்ப்போம்.
முதலில் அதில் கிடக்கும்
ஓமப்பொடியை எடுத்துத்தின்போம்.
ஓ! இப்போது தான்
நம்பிக்கை வாக்கெடுப்பு
எடுக்கப்போகிறார்களாம்.
சரி! மிக்சரில் உள்ள‌
அவல் பொரிகடலையை
ஒன்னொண்ணாய் பொறுக்கித்தின்போம்.
அடடே! என்னவோ
ரகசிய வாக்கெடுப்போ எதுவோ
கேட்கிறார்களாமே!
அதெல்லாம் கிடையாது!
அந்த ஓட்டுகளை கைதிகள் போல்
கையிலிலும் காலிலும் சங்கிலி மாட்டி
வாயில் பிளாஸ்டர் வைத்து
இங்கு  வரிசையாக கூட்டி வந்திருப்பதே பெரிது!
சட்டு புட்டுன்னு
தலையை எண்ணி அனுப்பி விடறது ஒண்ணு தான்
இப்போ உள்ள மெயின் அஜெண்டா!
அதைவிட்டு
ரகசியம் அது இதுன்னு வச்சா
ஏம் பொழப்பு என்னாகிறது?
எனக்கு தான் எல்லாம் அதிகாரமும் இருக்கு!
பேசாமே போய் ஒக்காருங்க!
மிக்ஸர் பொட்லம் ரொம்ப ருசி!
அதில் உள்ள வேர்க்கடல பருப்பு
வறுக்கப்பட்டு மொறு மொறுன்னு
என்னா ருசி!
என்னவோ அமளியாம்.
மைக்கு உடஞ்சுதாம்.சட்டை கிளிஞ்சதாம்.
எதுத்து குரல் கொடுத்தவ‌ங்கள‌
வெளியேத்திட்டாங்க அடிச்சு மிதிச்சு!
மத்த பேரும் வெளியேறிட்டாங்க.
எதுத்து ஓட்டு போடணும்னு கொஞ்சம் பேரு தான்
மிச்சம்.
ஜனநாயக கைதிங்க எல்லாரும் சேந்து
அவர தேர்ந்தெடுத்திட்டாங்களாம்.
வெளியே பட்டாசு வெடி  கேக்குது.
ஸ்வீட்ஸ் வினியோகம் ....
கேக்காமலேயே வாய்க்குள் திணிக்காய்ங்க.
நமக்கு என்ன? அத பத்தி!
ராமன் ஆண்டா என்ன? ராவணன் ஆண்டா என்ன?
எத்தன நாளக்கித்தான் இதையே சொல்லிக்கிட்டு?
சீதை ஆண்டா என்ன? சூர்ப்பனக ஆண்டா என்ன?
மிச்சரும் தீந்து போச்சு!
பேப்பரை கசக்கி போட்டுட்டு
போய்கினே இருப்போம்!
அது என்ன பேப்பர்?
அதான் அடிக்கடி போடுற
நம்ம வாக்குச்சீட்டு.

===================================================

வியாழன், 16 பிப்ரவரி, 2017

விளிம்புகள் (1)

 விளிம்புகள் (1)

=================================


"Adolescence"

by

Claude McKay


There was a time when in late afternoon
    The four-o’clocks would fold up at day’s close
Pink-white in prayer, and ’neath the floating moon
    I lay with them in calm and sweet repose.



பகல் வேளை புறமுதுகு காட்டி 
மேற்கு நோக்கி ஓடும் வேளை  அது..
நான்கு மணிக்கு அப்புறமாய்  
நேரம் ஆக ஆக கடிகாரத்தின் முட்கள் 
கை  கூப்பித்தொழ 
ஆயத்தப்படுத்திக்கொள்கின்றன.
இளஞ்சிவப்பை அந்த வெள்ளைத்துணி 
வான விரிப்பில் கொஞ்சாம் கொஞ்சமாக 
ஊற்றிக்கொண்டிருந்தது அந்தி வேளை !
இத்தனை அரங்கேற்றமும் 
மிதந்து கொண்டு உன்மத்தம் கொண்டிருக்கும் 
அந்த நிலவுக்கு கீழே !
நானும் அமைதியின் அந்த இனிமையில் 
ஊறித்திளைத்துக்கிடந்தேன்.

=======================================================
பெயர்ப்பு:    ருத்ரா இ பரமசிவன் 



சாலிட்டரி ரீப்பர் .....வில்லியம் வர்ட்ஸ்வர்த் (2 வது பாடல்)

சாலிட்டரி  ரீப்பர் .....வில்லியம் வர்ட்ஸ்வர்த்  
(2 வது பாடல்)
============================================


No Nightingale did ever chaunt

More welcome notes to weary bands

Of travellers in some shady haunt,

Among Arabian sands:

A voice so thrilling ne'er was heard

In spring-time from the Cuckoo-bird,

Breaking the silence of the seas

Among the farthest Hebrides.



ஒரு நெய்தல் பாட்டு.
============================

அவள் பாட்டின் ஒலியை 

அந்த வானம்பாடிகளின் கீற்றுப்பிளவுகளான 

பூஞ்சிற்றலகுகளின்   இனிய தூறல்கள் கூட
  
இப்படி செபித்ததில்லை .

வெயில் வறுக்கும் அரேபிய பாலைவன 

மணல் நறு நறு ப்புகளில் 

கால் பதிய கடக்கும் பயணிகள் 

தங்கள் நிழல்களையே 

மர நிழல்களாய்  

ஒண்டிக்கிடக்கும்போது 

குளிர் பூங்குரலாய்  வரவேற்பது கூட 

அந்த தொலைதூர 

கதிர் அரிவாள் மங்கையின்

விடியல் பாட்டு தான்! 

வசந்த காலத்தை  குக்கூ  இசையாய் 

ஒலிபெயர்க்கும் குயில்கள் கூட 

இப்படியொரு சிலிர்ப்பூட்டும் 

உயிர்ப்பொலியை தந்ததில்லை.

அது 

அந்த ஸ்காட்லேண்டின் வடமேற்கு 

தீவுக்கூட்டங்களின்

தூரத்து மோனத்தை 

இப்படிக்   கடற் கூந்தலை 

கலைத்து விட்டுக்கொண்டு 

தலை வாரும் வேகத்தோடு கலைத்ததில்லை.

உற்றுக்கேளுங்கள் அவள் பாட்டை.

அது

சிதறிய தீவுகளுக்குள் 

அவள் கனவுச்சித்திலங்கள்  

ஊடி இழையும் 

ஒரு நெய்தல் பாட்டு ஆகும்!  

===========================================
மொழி மறு உயிர்ப்பு:
ருத்ரா இ பரமசிவன்.



புதன், 15 பிப்ரவரி, 2017

சுவர் சுவர்...இடையில்

சுவர் சுவர்...இடையில்



அடுத்த பக்கம் பியானோ வாசிக்கும்
அந்த பெண்ணையும்
அவள் மூடிய கண்களையும்
ஒரு ஓவியம் தீட்டுகிறேன்.
அவள் அந்த பியானோ வாசிப்பை
நிறுத்தியதும்
அவள் மறைந்தே போகிறாள்.
இந்த அற்புத உணர்வை உங்களுக்கு
எப்படி வண்ணம் தீட்டி காண்பிப்பது?
இப்படித்தான்
புகைபிடித்துக்கொண்டிருக்கும் போது...
மேலும் அங்கே
புகைக்குமிழிகள் புஷ்பிக்கப்பட்ட முடியாமல்
தீர்ந்து விடும்போது...
என் பேனாவை என் உதடுகளின்
விளிம்போரம் உருட்டி
எனக்குள்ளிருந்து ஒரு எரிமலையை
பூக்க வைத்து சுட்டுக் கறுப்பாக்கிக்   கொண்டிருப்பேன்.
ஏனெனில் எனக்கு வெறுமை என்பதே
மரணம்.
என்னை உயிர்ப்பிக்க
என்னையே மரணித்துக்கொள்ளும்
ஒரு விந்தையான உணர்வு இது!
பியானோவின் ஒலி நின்று விடுவது என்பது
என்னைப்ப்பொறுத்தவரை
அது இந்த பிரபஞ்சத்தின் ஒரு பெரிய ஓட்டை.
அதை மீண்டும் என் உதடுகளால் அடைக்க
அதில் என் வெளிறிய உதட்டுச்சுவட்டை பதிக்கிறேன்.
அப்படிசெய்யாவிட்டாலும்
அது வெறும் ஓட்டை அல்ல.
அந்த வெறுமையே
அனைத்து இசைகளையும்
நான் கேட்கும் இன்பச்சாளரம்!

========================================================

பெயர்ப்பு :  ருத்ரா இ பரமசிவன்.






Poem-a-Day | Poets.org poem-a-day@poets.org Unsubscribe

3:30 AM (16 hours ago)
to me
View this email on a browserForward to a friend
facebook-icon tumblr-icon twitter-icon
December 12, 2016

from “Please Bury Me in This”

Allison Benis White
Now my neighbor through the wall playing piano, I imagine, with her          eyes closed.

When she stops playing, she disappears.

I am still waiting for the right words to explain myself to you.

When there was nothing left to smoke, I drew on my lips with a pen            until they were black.

Or is this what it means to be empty: to make no sound?

I pressed my mouth to the wall until I’d made a small gray ring.

Or maybe emptiness is a form of listening.

Maybe I am just listening.
Facebook Like Button  Tweet Button


illustration

About This Poem

“This poem is from my book-length series, Please Bury Me in This, forthcoming from Four Way Books in 2017. Beyond my piano-playing neighbor, who has since moved and been replaced by two quiet brothers, I don’t remember writing this poem at all (usually a good sign). Although I do remember the late C. D. Wright’s words, ‘Follow the lights in your own skull.’”
—Allison Benis White

Allison Benis White is the author of Please Bury Me in This (Four Way Books, forthcoming in 2017).  She teaches at the University of California, Riverside, and lives in Irvine, California.

"காதலர் தினக்" கவிதை (3)


"காதலர் தினக்" கவிதை (3)

அலை
===============================================ருத்ரா

அலையா? கடலா?
எது நீ சொல்?
முட்டாளே!
ஒன்று தானே இன்னொன்று.
ஒன்றில்லாமல் இன்னொன்றில்லை.
ஹா!ஹா!ஹா!
யாரை ஏமாற்றுகிறாய்?
நீ
காதலா? பெண்ணா? சொல்!
இரண்டும் தான்.
அடிப்பாவி!
என்ன ஏமாற்று வேலை.
பெண்களையெல்லாம் தேடினேன்..பார்த்தேன்.
அங்கே காதல் இல்லை.
காதலையெல்லாம் தேடினேன்...தேடினேன்
அங்கே ஒரு மூளிவானம் தான் தெரிந்தது..
அடி முட்டாளே!
எங்காவது ஒரு இதயம் துடிக்க‌
கேட்டிருக்கிறாயா?
அந்த இதயமாய் நீ ஆகியிருக்கிறாயா?
அந்த இதயத்துக்குள்ளும்..இதயத்துக்குள்ளும்
ஆயிரம் ஆயிரம்
ரோஜா இதழ் அடுக்குகளாய்
உணர்ந்து களித்து இலேசாய் ஆகியிருக்கிறாயா?
அது வரை
நீ கல் தான்.
அதுவும் கல்லறையை மூடிக்கிடக்கும்
கல் தான்.
உன் அருகே
ஒரு பச்சைப்புல்
உன்னைப்பார்த்து கேலியாய்
சிரிப்பதை புரிந்து கொள்ளும்
ஒரு மெல்லிய மின்னல்
என்று உன்னைத்தாக்குகிறதோ
அன்று
நீயே..காதலின்
கடல்.
நீயே..காதலின்
அலை.

=====================================================================







செவ்வாய், 14 பிப்ரவரி, 2017

நன்றே செய்வோம்

நன்றே செய்வோம் இன்றே செய்வோம்
=============================================ருத்ரா

வாரிக்குவித்தீர் ஓட்டுகளை!
இந்த தீவட்டிக்கொள்ளைக்கா
அவசரப் பட்டீர்?

நீதியை கல்லறைத்தோட்டத்தில்
புதைத்தவரிடமா போய்
புதைந்தீர்கள்?

சுட்டெரித்தது நீதி!
ஊழல் முகங்கள் அத்தனையும்
சாம்பல் சாம்பல் சாம்பல் தான்.

தூண்டில் புழுவாய் இலவசங்கள்
தூண்டில் மீன்களோ
நீங்கள் தான்!

நீங்களே போட்ட‌ ஓட்டுக்கள்.
உங்கள் தலை சொறியும்..தீக்
கொள்ளிகளா?

"கைப்பேசிகளின்" யுகம் இதுவே!
காலம் மாறும் என்பதெல்லாம்
பத்தாம் பசலிக் கொள்கைகளே!

நேனோ செகண்டில் எல்லாமும்
தலை கீழ் ஆகும்
அறிவீரோ?

குவாண்டம் மெகானிக்ஸ் சமுதாயம்.!
கண்ணீர்க்கதைகள்
தேவையில்லை.

செவ்வாய்க் கோளின் மண்ணெடுத்து
புதிய மனிதன் உருவாக்க‌
புறப்பட்டுவிட்டான் புது மனிதன்.

பஞ்சாங்கத்துக்   குப்பைகளும்
பாவ புண்ணிய பொய்மைகளும்
தூக்கியெறி! தூக்கியெறி!

நூத்தினாலு விண்கோள்கள்
அனுப்பிய பின்னர் உடைப்பார்கள்
நூத்தியெட்டுத் தேங்காய்கள்.

விஞ்ஞானங்கள் வளர்கையிலே
பொய்ஞானங்களும்... கூட‌
வரலாமோ?

ஜனநாயகம் எனும் அர்த்தமிங்கு
சர்வாதிகாரமா
சிந்திப்பீர்!

நாலரையாண்டு பொறுப்பதற்குள்
நாட்டின் வளங்கள்
ஏப்பம் தான்!

நன்றே செய்வோம் இன்றே செய்வோம்
என்றே எழுவோம்
இன்றே நாம்!

=================================================











காதல் தினக்கவிதை (2)





காதல் தினக்கவிதை (2)

நிலா நிலா ஓடிவா
=========================================ருத்ரா

நிலா நிலா ஓடிவா
நில்லாமல் ஓடிவா
இல்லாவிட்டால்
உன்னையே
இவர்கள்
நறுக்கி நறுக்கி நறுக்கியே
உப்புக்கண்டம் போட்டு
கவிதை தொகுதி போடுவார்.

மயில் பீலிகளிலும்
தடவி தடவி
ரத்தம் கசிய வைப்பதில்
எழுத்துக்களும்
எலும்பு துருத்திக்கொண்டிருக்கும்.

பாலவன மணல்துளிக்குள்
படுத்துக்கிடந்து எழுதுவார்.
ஒட்டகங்கள்
ஓய்ந்து நின்று
அங்கு வந்து "நயாகரா" பெய்து
நட்டமாக நின்றதென்று
நடுகல் வைத்து எழுதுவார்.

பேனாவுக்குள் புகுந்து கொண்டு
நிலவுச்சதையை உருக்கியே
காகிதமெல்லாம்
வட்டம் வட்டம் வட்டமாய்
வடாங்களும் பிழிந்து தள்ளுவார்.

போய்க்கொண்டே இருக்கும் கடையாணி சக்கரத்தின்
நாக்கை நக்கிப்பார்க்க துடித்தது.
சக்கரப்பட்டையில் சக்கரவாகங்கள் நசுங்கிக்கிடந்தன.
சிறகுகளில் எல்லாம்
நட்சத்த்திரப்பொடிகள் பார்பர்ஷாப் குப்பையாய்...
பிரமிடுகள் பிடரிமுளைத்து
கோரைப்பற்கள் காட்டி வாய் பிளந்தன.
மெடுஸ்ஸாவின் தலை வெட்டப்பட்டு
மாலைச்சுரியன் க்ரிம்ஸன் ரெட்ல் ஜூஸ் பிழிந்து
ஆயிரம் ஆயிரம் நாகங்கள் திசைக்கொன்றாய்
நெளிந்து ஓடி..
அப்படியும் அந்த பேனாவும் காகிதமும்
கல்லாய் உறைந்து கிடக்க...
டெல்ஃபிக் ஆரக்கிள் கோடாங்கி அதிர்வுகளில்
அவள் இமையின் மெல்லிய பச்சை நரம்புகள்
ஈ சி ஜி வரிகளாய்
பூக்கள் தூவப்பட்டும் இப்போது கசங்கி
நிர்மால்யமாய் தலையணை மெத்தையில்
குமிழி குமிழி குமிழி குமிழிகளாய்
எதைச்சொல்லும்?
மிச்சமாய்
ஒரு நிலாவும் அங்கு ஒரு குமிழியாய்
உதிர்ந்து கிடக்கிறது.

==================================================ருத்ரா