வெள்ளி, 30 அக்டோபர், 2020

"மேலாண்மை பொன்னுச்சாமி."

Melanmai ponnuswamy.JPG

நன்றி... https://en.wikipedia.org/wiki/Melanmai_Ponnusamy



எழுத்து என்றால் என்ன?

அதில் பசியின் அமிலம் எரியலாம்.

மயில்பீலிகளின் வர்ணம் தெரியலாம்.

கருவாட்டுக்குழம்பு ஏக்கத்தோடு

வியர்வையின் அமுதக்குடம் சுரக்கலாம்.

உப்பரிகையாளர்களுக்கும்

உப்புக்கரிக்கும் உழைப்பார்களுக்கும்

கால் பதிக்கும் சமூகம் ஒன்று தான்.

சுவடுகள் தோறும் முரண்கள்.

இதைக்களைய எண்ணும் 

எழுத்துகள் களைப்பதே இல்லை.

சாஹித்ய அகாடெமியோ..ஞானபீடமோ

சமயங்களில்

தன் மீது படிந்த அழுக்குகளை

கழுவிக்கொள்ள இவைகளுக்கு 

மிகச்சிறந்த‌

எழுத்துக்கள் தான் தேவைப்படுகின்றன.

அந்த எழுத்துக்களாய்

நிமிர்ந்தே இருந்தவர் நம்

"மேலாண்மை பொன்னுச்சாமி."

நாய் குரைப்பதை மட்டுமே எழுதுபவன்

வெறும் பேனாவில் தான் எழுதுகிறான்.

அதன் ஊளைக்குரல் ஊசிக்குரலாய்

சூரியனுக்கே ஊசி போடுகிறது

என்று எழுதுபவன்

மண்ணின் அடி "லாவா"வைத்தொட்டு

எழுதுபவன் ஆகிறான்.

இவனே அந்த செம்மை எழுத்தாளன்.

அவனுக்கு நம்

சிவப்பு வணக்கங்கள்.


______________________செங்கீரன்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக