செயற்கை மூளை
மூலைக்கு மூலை
விரட்டுகிறது.
மனிதம் வெறும்
பேராசைப்பிண்டமா?
எண்ண ஓட்ட
நரம்புக்குள்ளெல்லாம்
குவாண்டம் அதிர்வுகளா?
விளம்பர தரவுகளே
நம் பசியாகி
அதுவே உணவாகும்
வேதனையான வேடிக்கைகளே
நம்
கேம் சேஞ்சிங்க் கேமஸ்.
பில்லியன் பில்லியன் டாலர்களின்
குவியல்கள்
பங்குச்சந்தைகளில்
பந்தி விரித்துக்கொண்டிருக்கின்றன.
ஈசல்களை விடவும்
விட்டில் பூச்சிகளை விடவும்
குப்பையாய்
இரைந்து கிடக்கும்
பண்டமாகிப்போனான் மனிதன்.
மூளைச்செதிகல்ளுக்குள்
மாய பிம்பங்களின்
நுரைப்புகளும்
நொதிப்புகளுமே
ஹேலுசினேஷன்களாய்
கற்பனைக்கெட்டாத
கணக்கிடும் வேகங்களில்
அண்டங்களையும்
அங்குலம் அங்குலமாக
செதுக்கித்தள்ளுகிறது.
"சிற்பங்களையா?
அற்பங்களையா?"
சிதலங்களின் பரல்கள் ஒலிக்கும்
சிலம்புகள்
புலம்பத்தொடங்கி விட்டன!
___________________________________________
சொற்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக