விளையாடக்கூப்பிட்டாள் அவள்
கடவுளை.
கடவுளும் வந்தார்.
ஓட்டாஞ்சல்லி வைத்து பாண்டி
விளையாட்டு.
ரைட்டா தப்பா சொல்லி
ஆடி விட்டாள்.
நீ தாண்டு என்றாள்.
அவர் முழித்துக்கொண்டு
நின்றார்.
எதைத்தாண்டுவது?
எதற்கு தாண்டுவது?
அது என்ன?
கட்டமா? வர்ணமா?
"தாண்டி போகமுடியலையா?
சரி....நீ தோத்தாங்குளி தான்."
"மந்திரங்களுக்கு குறைச்சல் இல்லை.
கும்பாபிஷேக கொண்டாட்டங்களுக்கும்
குறைச்சல் இல்லை.
ஆர்ப்பாட்டங்களின் நசுங்கல்களில்
தினம் தினம் நான் திக் விஜயம்
செய்து கொண்டிருப்பதாய்
அவர்கள் புல்லரித்துக்கொண்டிருந்தார்களே.
எனது சூன்யம் எனக்கு புரிந்து விட்டது."
இப்போ
இந்தச் சிறுமியின்
பெருமிதத்துக்கு முன்
அவர் குறுகிப்போனார்.
அவர் இன்னும் மூளியாகத்தான்
நிற்கிறார்.
_______________________________________
சொற்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக