திங்கள், 6 ஏப்ரல், 2026

சல்லாத்துணிகள்.

 



விரலில் விழும் பொட்டு

நம் 

மிச்சமா? எச்சமா?

ஊடகப்பறவைகள்

சிறகடித்ததில்

பொய்யின் நிழல்களே

நம் வரலாற்றை முழுதுமாய்

புதைத்து மூடும்

சல்லாத்துணிகள்.

மனித அவலங்கள்

நம் வண்ணக்காட்சிபெட்டிகளின்

அன்றாடக் கடைவிரிப்புகள்.

ஹிட் ரேட் அம்பு விளையாட்டில்

உண்மையே இங்கு படுகொலை!

___________________________________

சொற்கீரன்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக