செவ்வாய், 7 ஏப்ரல், 2026

நாக்குறுதிகள்

 நாக்குறுதிகள்

________________________________


தேர்தல் விழா

களை கட்டி விட்டது.

அன்று

வாக்குறுதிகளாக‌

வலம் வந்தவை

இன்று

நாக்குறுதிகளாய்

எங்கு பார்த்தாலும்..

நாவுகளின்

நெளிவு சுழிவுகளை

சினிமா நோட்டீசுகளாய்

எங்கும் 

வாரி இறைக்கிறார்கள்.

ஆளுக்கொரு வீடு

அந்த சின்ன வீட்டுக்கும் 

ஒரு வீடு

என்று

வண்ண வண்ண பலூன்கள்

ஆகாசத்தில்.

மாநில சுயாட்சியாவது

மண்ணாங்கட்டியாவது

தமிழ் நம் ...

வேண்டாம் 

எதுக்கு பல்லை உடைத்துக்கொண்டு...

அது தான் கம்பியூட்டரில்

சமஸ்கிருத‌த்தை 

ஐஸ்கிரீம் ஆக்கித்தருகிறார்களே..

நம் குழந்தைகளுக்கு பெயர் சூட்ட.

அப்புறம்

எதுக்குத்தான்

இந்த 

கூட்டங்களும் பரபரப்புகளும்..

அது ஒரு "பேண்ட் வேகன்" சிண்ட்ரோம்...

மனிதர்களாய் இருப்பதை விட‌

நமக்கு

மந்தைகளாய் இருப்பதே சுகம்!

________________________________________

மந்தைதாசன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக