வெள்ளி, 21 நவம்பர், 2025

தரிசனம்

 


தரிசனம்

__________________________________


ஸ்டோரியில் 

கவிஞர் விக்ரமாதித்தியனின்

கவிதைகளுக்குள்

புகுந்து கவிதைகளாக 

வெளிவந்த என்னையே நான்

தரிசனம் செய்திருப்பதே 

என் இந்த கவிதைகள்


____________________________________________


கவிஞர் விக்கிரமாதித்யன் 6

___________________________________


அன்றாடங்களையே

வெறுமையாய்

காய்ச்சிக்குடித்துக்

கொண்டிருக்கும்

இந்த அன்றாடங்களின்

அண்ட சராசரங்களை

தினம் தினம்

உயிர் எழுத்தும் 

பெய் எழுத்துமய்

கொப்புளித்துக்

கொண்டிருப்பவனே!

ரேஷன் அட்டைகளில்

ஊர்ந்து கொண்டிருக்கும்

புழுக்களும்

புளகாங்கிதம் அடையுமே உன்

புல்லரிப்புச்சொற்கள் கண்டு.

________________________________________21.11.25

சொற்கீரன்


கவிஞர் விக்கிரமாதித்யன்   8

    22 11 25

துருவிப்பார்த்தால்
துரும்பும் தேறாது
கவிதைகளில்.
வர்ணனைக்கு
பஞ்சமில்லை.
பல் குத்தும் துரும்பு கூட‌
எனக்கு
வானவில் தான்.
கடித்து தின்னும்
பேரிக்காய் துண்டுகள் கூட‌
அதோ நிலாப்பிஞ்சுகள் தான்.
கந்தல் துணியின்
"புலித்தோலை அரைக்கு அசைத்து"
நசுங்கிய டால்டா டப்பாவில்
"பிக்ஷா மூர்த்தியாய்"
வலம் வருவேன்.
_______________________________________
சொற்கீரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக