வியாழன், 22 மே, 2025

தமிழன்பனுக்கு தமிழ் கூறும் வாழ்த்து!

 தமிழன்பனுக்கு  தமிழ் கூறும்  வாழ்த்து!

______________________________________________


நூறு

நூற்றிஒண்ணு

நூற்றி ரெண்டு

............

கணிதம் சலித்துப்போய் தான்

இன்ஃபினிடி 

என்று 

ஒதுங்கிக்கொண்டது.

உங்கள் தமிழ்

எங்கள் நெஞ்சங்களுக்குள்

புகுந்து கொண்டதில்

"எல்லையறு

பரம்பொருளுக்கும்

பதவுரை..பொழிப்புரை

தந்து கொண்டே இருக்கிறது"

எத்தனை நூற்றாண்டுகள் 

வேண்டும்..

எடுத்துக்கொள்!

கணக்கற்ற நூற்றாண்டுகள்

இதோ உன் சொற்களில்

நீண்டு கொண்டே இருக்கின்றன.

நீடூழி..நீடூழி நீ வாழ்க!

இது 

தமிழன்பனுக்கு

தமிழ் கூறும்

வாழ்த்து!


_____________________________________

சொற்கீரன்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக