திங்கள், 19 நவம்பர், 2018

என்ட்ரொபி டெத்

என்ட்ரொபி டெத்
===============================================ருத்ரா

கஜா புயல் நமக்கு வகுப்பு நடத்திவிட்டுப் போயிருக்கிறது.வானம், பூமி, பூமியின் அழுத்தம், வெப்பம்,இதன் அடிவிசையாக இருக்கும் (பூமி) ஈர்ப்பு இதைப்பற்றியெல்லாம் ஒவ்வொரும் அறிந்திருக்கவேண்டும்.மக்கள் ராமன் கிருஷ்ணன் பிள்ளையார் மாரியம்மன் இவற்றைப்பற்றியெல்லாம்
ஒவ்வொரு கிராமமும் அணு அணுவாக கவலைப்பட்டு சாதி சமய கிறுக்குத்தனங்களில் மூழ்கிப்போயிருக்கிறார்கள்.இதில் குறுக்குவழியில்
பணம் சேர்க்கும் அரசியல் விளையாட்டுகள் வேறு.சிறுவயது முதலே
விஞ்ஞானம் வழியாக இந்த உலகத்தைப்பார்த்து படித்துப் பட்டம் பெற்ற‌
இளைய தலைமுறைகள் கூட கார்ப்பரேட் எனும் தனி மனித லாபக்குவியலை நோக்கியே படையெடுக்கின்றன.கார்ப்பரேட்டுகள் இந்த விஞ்ஞானத்தை தங்கள் நிதிக்குவியல் மூலம் கூர்தீட்டி மேலும் தங்கள் லாபக்குவியலை பெருக்கிக்கொண்டே போகின்றனர்.
இதற்கு அவர்களின் எடுப்பார் கைப்பிள்ளையாக இருப்பதே அரசியல்.
மக்களின் ஒட்டுமொத்த சமுதாயம் என்பது கண்ணுக்குத்தெரியாத ஆற்றல் தான். கார்பரேட்டுகளின் அரசியல் இந்த சமுதாய நகர்ச்சிகளை (சோசியல் டைனாமிக்ஸ்) தான் வகுத்த சமுதாயவிஞ்ஞான சூத்திரங்களுக்கு ஏற்றவாறு (சோசியல் சைன்ஸ் ஃபார்முலாஸ்) கையாள்கிறார்கள்.தற்போதய அத்தகைய அவர்களின்
சுரண்டல் வடிவங்கள் சினிமா ஸ்மார்ட் ஃபோன் மற்றும் டிவி ஊடகங்கள்.இவையெல்லாம் சமுதாயத்திற்கு பெரும் நன்மைகள் அளிக்கும் கருவிகள் தான்.ஆனால் இவையெல்லாம் அவர்கள் கையில்
இருப்பதே நம்மை ஆளும் அரசியல்.இதன் எதிர் அரசியல் என்பது
மிக மிக நுண்மையான அரசியல்.ஒவ்வொரு மனிதனும் சோறு சாப்பிடுவதை எப்படி அவசியமாக நினைக்கிறானோ அதை விட "பசியெடுக்கும்" உணர்வோடு இந்த அரசியலை புரிந்து கொள்ள வேண்டும்.அப்படி உடனடியாய் அப்படியொரு நுண்ணிய அரசியல்
பற்றி தெரிந்து கொள்ள முதல் படிக்கல்லாய் பயணத்தை துவக்குவது
எதில் என்றால் அதுவே "ஓட்டு அரசியல்"

இது ஆயிரம் இந்துமகாசமுத்திரங்களைவிடவும் ஆழமானது அகலமானது.இந்தக்கடல்களில் எதிர்நீச்சல் போட வேண்டியுள்ளது.
கஜாப்புயல்களையும் விட பன்மடங்கு சீற்றம் காட்டவேண்டிய நிலையில் தான் நாம் உள்ளோம்.எதன் மீது? நம் அறியாமை மீது? நம் ஆற்றமை மீது? நம் இயலாமை மீது? இவற்றையெல்லாம் தெளிந்துகொள்ளமுடியாமல் நம் மீது அழுத்திக்கொண்டிருக்கிறதே அந்த மூடத்தனத்தின் பாறாங்கல் மீது?
தலைப்பை எங்கோ வைத்துவிட்டு எங்கோ போகிறீர்களே என்று நீங்கள் கேட்பது புரிகிறது.

lack of order or predictability; gradual decline into disorder.
"a marketplace where entropy reigns supreme"

இதன் விஞ்ஞான பரிமாணங்களான"தெர்மோ டைனாமிக்ஸ்"பற்றியே தலைப்பு இட்டேன்.ஆனால் அது சோசியல் தெர்மோ டைனாமிக்ஸ்க்கு இழுத்து வந்து விட்டது.

அடுத்த பதிவில் ட்ராக் மாறலாம்.












கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக