ஞாயிறு, 3 டிசம்பர், 2017

ஆர். கே .நகர்.(3)

ஆர். கே .நகர்.(3)
=======================================ருத்ரா

சூடு பிடித்து விட்டது.
தூள்  கிளம்புகிறது.
கோடம்பாக்கத்து
சொர்க்கபுரிக்காரர்களும்
களம் குதிக்க வந்து விட்டனர்.
சினிமா என்பது
காமிராவெளிச்சத்தின்
வெறும் நிழல் திட்டுகள் அல்ல.
அதன் கண்ணீரிலும்
வியர்வையிலும்
ரத்தவிளாறுகளிலும்
நிஜத்தின் நரம்புகளும்
இழையோடுகின்றன.
அதனால் தான்
எம்.ஜி.ஆரின்
சவுக்குமுனை இன்றும்
கூர்மையை சொடுக்குகின்றன.
ஆனால்
எம்.ஜி.ஆர் உள்ளிட்டு
அவர் வாரிசு உட்பட
யாவரும்
அந்த அரிதாரத்தை
அழிக்க மனமின்றி
ஒரு நிழலின் நிழலாக
வேடமிட்டு
இந்த பாமரப்புழுக்கள்
எனும் ஓட்டுச் சிப்பங்களை
மூட்டைகட்டி எடுத்துக்கொண்டு
அதன் பின்னே
அபாயகரமான பணமூட்டைகளை
வைத்து ஆண்ட
அலங்கோலங்கள் அவலங்கள்
நாம் அறிவோம்.
அவை
இந்த வார்தா ஓக்கி புயல்களையும் விட
படு பயங்கரமானவை.
இப்போது
விஷால் அவர்களும்
அந்த அரக்கத்தின் கால்சுவடுகளையும்
தன் "பாதுகைகளாக" ஏந்தி
ஒரு பரத காண்டத்தை
பாராயணம் செய்ய வந்திருக்கிறாரோ
என்ற ஒரு அச்சமே
தமிழ்த்திராவிட  உணர்வாளர்களிடம்
இழைந்து கிடக்கிறது.
மக்கள் பிரச்னை..ஊழல்
என்றெல்லாம்
தன் "பெருங்குடையைப்பிடிக்கும் "
அவர்காலடிகளின் கீழ்
அந்த ஊழலின் காளான் குடைகள் தான்
தெய்வங்களாக
தரிசனம் தருகின்றன.
"முரண்பாடுகளின்"
முனைப்பாகவே
அவர் நின்று கொண்டிருக்கிறார்.
தமிழர்களே
மீண்டும் மீண்டும்
சிந்து பாத்தின்
அந்த கடற் கிழவன் தான்
உன் தோள்  மீது
சவாரி ஏறவேண்டுமா?
தமிழா ! தமிழா!
நீ இப்போது
விழித்தே ஆகவேண்டும்.
பிறகு பார்க்கலாம் என்றால்
நீ
பார்ப்பதற்கு
அந்த கீழ் வானமும் இருக்காது.
நீ
நிற்பதற்கு
இந்த மண்ணும் இருக்காது.

=============================================






2 கருத்துகள்:

KILLERGEE Devakottai சொன்னது…

சரியான சவுக்கடி வார்த்தைகளின் பதிவு உண்மையின் நிலைப்பாட்டை விளக்கிய விதம் அருமை.
- கில்லர்ஜி

ruthraavinkavithaikal.blogspot.com சொன்னது…

அன்பார்ந்த கில்லர்ஜி அவர்களே
தங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி.

அன்புடன்
ருத்ரா

கருத்துரையிடுக