திங்கள், 13 ஏப்ரல், 2020

இனிய சித்திரை பூக்கட்டும்.

இனிய சித்திரை பூக்கட்டும்.
========================================ருத்ரா


இனியச் சித்திரைத் திங்கள் விழா.
மனங்களுக்கு
மகிழ்ச்சிச்சிறகுகள் முளைக்கட்டும்.
காதல் வயதுகளில்
மின்னல் பயிர்கள் எழுந்திடட்டும்.
வாழ்க்கைப்பாதை 
புதிய சுறு சுறுப்புககளில்
மைல் கற்களை நட்டுக்கொள்ளட்டும்.
நமக்கு வேண்டிய புரதம் "நோயாய்"
நம்மையே விழுங்கித்தீர்க்கும்
இன்னல் காலங்கள்
தொலந்தே போகட்டும்.
மனித முயற்சியும் அறிவும்
வெற்றிக்கவசங்கள் அணியட்டும்.
கோவில்களையும் கொஞ்சம்
தூசி தட்டி வைப்போமாக!
உளிச்சத்தங்களையெல்லாம்
கல்லில் காவியம் ஆக்கினோம்.
அந்தக்கற்பனைகளை
கொஞ்சம் கொஞ்சமாய் அருந்துவோம்.
அதில் அறிவின் தெளிவு
ஒரு வெளிச்சம் காட்டும் வரை
பருகுவோம் உருகுவோம்
பண்புகளை உயர்த்துவோம்.
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புவோம்
என்பதே
நாம் செய்யும் சமுதாய "அர்ச்சனை"

===========================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக