ஞாயிறு, 30 ஏப்ரல், 2023

ஹைக்கூ

 




ஹைக்கூ





-ஹைக்கூ

---------------------------------------------------ருத்ரா 


இப்போது இது 

பிஷ்மர்

 அம்பு படுக்கையில்.


 ஜனநாயகம்.

---------------------------------------------------1


ஓட்டை வாளிகளில் 

தண்ணீர் இறைக்க 

இத்தனை பேரா?


செய்தி ஊடகங்கள்.

-----------------------------------------------------2


இனி பிறக்கும் குழந்தைகளுக்கும் 

தலைக்குள்

"கூகிள் "தான். 


ஏ.ஐ.

-----------------------------------------------------3  


 


 











மே தினம்






மேதினம்

____________________________சேயோன்.



சடங்கா?

சரித்திரமா?

சடங்கு ஆகிப்போன‌

சரித்திரமா?

நைந்து போய் பிய்ந்து போய்

இருந்தாலும் கொடிகளின்

சிறகுகள்

சிவப்பை உயிர்ப்பை

வெளிற விடவில்லை.

எட்டு மணி நேரம் அப்போது

நம் விடியல் விளிம்பு.

உன் கனவுகள்

எட்டும் வரை எம்பு.

மணிகள் வேலி தாண்டி

கடிகாரம் உடையட்டுமே.

வெறிக்கும்

எதோ ஒரு நிறம் காட்டி

மூர்க்கம் ஊட்டும்

கார்ப்பரேட்டுகளின் குத்தீட்டிகள்

இந்த காளைக‌ளுக்கு

மறைக்கப்படுகின்றனவா?

கில்லிங் இன்ஸ்டிங்க்ட் 

உன்னிடம் உண்டு.

இந்த இமயங்களைத் தட்டித்தூகு

என்று

வெர்ச்சுவல் ரியாலிடியில்

சூரியனின் பாப்கார்ன்ஸை

கொறித்துக்கொண்டிருக்கலாம்

என கணினியுக "கேம்ஸ் லேசர்கள்"

கண் சிமிட்டுகின்ற்ன.

இளைய தலைமுறையின் செம்புயல்

"ந‌ரை"கண்டுவிட்டனவோ?

சமுதாய ஓர்மை என்ற சொல்

கூர் தீட்டப்பட வேண்டும்.

மழுங்கடிக்கப்படவும் 

மடை மாற்றம் செய்யப்படவுமே

ஆயிரம் ஆயிரம் "ஆப்"கள் இங்கே.

கிராமத்து மண்ணாங்கட்டிகளுக்கும்

ஓடிபி எனும் பாஸ்வர்டுகள் 

புகுத்தப்படுகின்றன.

டையலக்டிகல் மெடீரியலிசம்

என்று பூதம் காட்டும் 

ஜோல்னா பையர்கள் 

பார்வை கழன்றவர்களாக‌

மாறிப்போனார்களோ? 

இந்த மக்களை தினம் தினம் 

கழுவேற்றிக்கொண்டிருக்கும்

"பச்சை முரணபாடுகள்"

அந்த சாதி மத

நச்சுத் தினவுகள் தான்

என்ற பால பாடம் 

இன்னும் இங்கு விளங்கவில்லையே.

விடியல் என்றால் வானம் எல்லாம் கிழிந்து

கன்னிக்குடம் உடைக்கும் என்ற‌

ஒரு பிர்சவ வலியின் தேசியக்கொடிகளா

இந்த மே தினக் கொடிகள்?

இல்லை.இல்லை.

உழைக்கும் நரம்பின் சிவப்பு வேர்வையே

இந்த மண்ணின் உயிர்ப்பு வேர்கள்.

அந்த உந்துதலே 

நம் விரல் நுனியிலிருக்கும்

நம் புதிய யுகம்!


‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍________________________________________________________ 

காதல் என்றொரு கேலக்ஸி

 




காதல் என்றொரு கேலக்ஸி

_______________________________________

ருத்ரா




கேலக்ஸி என்று ஆங்கிலத்தில்

ஒலித்த போதும் 

காதல் எனும் கலித்தொகை 

களிப்பு மிக்கூறுகிறது.

ஆம்.

என் இரவுப் பிழம்புக்குள்

நீ ஒரு ஓளிமண்டலம்.

கனவு கொண்டு தைத்தபோதும்

அந்த இருட்கந்தலில்

உன் ஊசி நினைவுகள்

என்னைச் சல்லடை ஆக்கிக்கொண்டு தான்

இருக்கிறது.

இந்த ஒளி நிழல் சல்லடையை

அன்றொரு நாள் தவறுதலாய்

அந்த ஜேம்ஸ்வெப் தொலைனோக்கி

"ஒளிச்சடையன்" என்ற 

ஒரு புது "கேலக்ஸியை"

கண்டுபிடித்து விட்டதாய்

தம்பட்டம் அடித்துக்கொண்டு இருக்கிறது.

அன்பே!

அது உண்மையில்லை என்று

நீ போட்டு உடைத்து விடாதே.

அந்த பிரம்மாண்ட பிரபஞ்ச சந்தோஷம் தான்

நமது சந்தோஷமும்.

காதல் என்ற கேலக்சியின் அர்த்தம்

மகிழ்ச்சி..மகிழ்ச்சி..பெருமகிழ்ச்சி


_____________________________________________ 

குகை

 





குகை

============================================

ருத்ரா



நான் தனிமையில் எத்தனையோ சிந்தித்திருக்கிறேன்.

முதலில் ஒரு இருட்குகையில் இருப்பது போல் இருக்கும்.

அப்புறம் அந்த இருட்டும் பழகிப்போகும்.

கருப்பு சூரியன் தன் கூந்தலை அவிழ்த்து

நம்மீதே காயப்போட உலர்த்துவது போல் இருக்கும்

இருள் கூட மயில் பீலிகள் போல்

பிசிறுகளை முகத்தில் வீசி கிச்சு கிச்சு மூட்டும்.



இந்த குகையில் உட்கார்ந்து

தியானம் செய்யவேண்டும் என்று

ரிஷிகள் வருகிறார்களாம்.

வாழ்கையின் ருசியும் வெளிச்சமும் வெளியில் இருக்க‌

இவர்கள் என்ன "பிரம்மானந்தை"சுவைக்க‌

உள்ளே வருகிறார்கள்.?


ஒரு சாமியாரும் ஒரு சாமான்யனும்

நண்பர்கள் ஆனார்கள்.


சுவாமி

அந்த சுவை எப்படித்தான் இருக்கும்?

காட்டுங்களேன்.


சரி இதோ சுவைத்துப்பார்!


ஒரு சுரைக்குடுவையிலிருந்து

என் வாயில் அதை ஊற்றுகிறார்.


ஆகா! திவ்யம் திவ்யம்..என்ன சுவை.

ஆனந்த கூத்தாடினேன்.


அப்பனே!

உண்மையில் அந்த ஞானாமுதம்

இதையும் விட ஆயிரமாயிரம் மடங்கு சுவை.


உனக்கு சிறிது அடையாளம் காட்டவே

இந்த "சோம பானம்"


சோம பானமா?

அது வேதகாலத்து டாஸ்மாக்கு சரக்கு ஆச்சே!

ஆனால்

என்னிடம் குவார்ட்டர் பாட்டில் ஒன்று தான் இருக்கிறது.


என்னப்பா அஸ்கு புஸ்கு என்கிறாய்?

அதை வைத்திருந்தால் கொடு.

நானும் அதை சுவைத்துப்பார்க்கிறேனே.

ஓங்காரத்திலிருந்து துரியப்பாய்ச்சல் புரியும்போது

நாங்கள் அனுபவிப்பது தான் அந்த ஞானானந்தம்.


நீங்கள் என்னமோ எங்கிருந்து கொண்டு வேறு எங்கோ

பாய்ச்சல் செய்வதைத்தான் சொல்கிறீர்கள்.

எங்கள் டாஸ்மாக்கை கொஞ்சம் உள்ளே ஊற்றினால்

எழுபதினாயிரம் பிரபஞ்சம் தாண்டி

எழுபதினாயிரம் சொர்க்கம் தாண்டி

பறந்து கொண்டிருப்போம்.


சரி உன் பாட்டிலை எடுத்துக்கொடு.

என் சுரைக்குடுக்கையை நீ எடுத்துக்கொள்.


இருவரும் பறிமாறிக்கொண்டார்கள்.


சுரைக்குடுக்கைககள்

கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரிக்குள்

அட்மிட் ஆனது.

குவார்ட்டர் பாட்டில் தேவர்கள் வழியாக

எமதர்மன் கையில் மாட்டிக்கொண்டது.


பூமியில் இப்போது

ஐந்நூறு வயது ஆயிரம் வயதுக்காரர்களின்

கூட்டம் மிகுந்து விட்டது.


பூமியின் சுற்றும் வேகம் குறைந்து

ஒரு நாள் என்பது

ஒரு ஆண்டு ஆனது.


===================================================

மீள்பதிவு.

ஹைக்கூவு!




ஹைக்கூவு!

__________________________________ருத்ரா



கிடக்கட்டும் என்று கைக்குட்டையை

எங்கோ அவள் வீசினாள்

அவன் ஆக்சிஜன் சிலிண்டரை.


________________________________________

வியாழன், 27 ஏப்ரல், 2023

கரப்பான்பூச்சிகள்


 



கரப்பான்பூச்சிகள் கூட‌

நம் பல்கலைக்கழகங்கள் தான்.

ஆனால் நம்மை 

நரகாசுரன்கள் ஆக்கி

வெடித்து மகிழும்

கடவுள்களா

நம் அடைக்கலன்கள்?

___________________________________

ருத்ரா.

( என்ட்ரோபி ஆஃப் காஸ்மாலஜி)




என்னதான் "அது"?

( என்ட்ரோபி ஆஃப் காஸ்மாலஜி)

_________________________________________________________இ பரமசிவன்.


கருந்துளை தான் காலக்ஸி எனும் ஒளிமண்டலங்களின் மையம் எனும் கருத்து விஞ்ஞானிகளிடையே பரவியிருக்கும் இந்த சமயத்தில் தரவு இயல் முரண்பாடு ( இன்ஃபர்மேஷன் பாரடாக்ஸ்) எனும் ஒரு கோட்பாடு விண்வெளியியல் அறிபாடுகளை (தியரிஸ்)தடுமாற வைத்திருக்கிறது.