வியாழன், 9 ஆகஸ்ட், 2018

கலைஞராற்றுப்படையே!

கலைஞராற்றுப்படையே!
==============================================ருத்ரா


தமிழினத்தலைவரே!
எங்கள் கலைஞரே!
வயதுகள் எனும்
வெற்று எண்கள்
வெறிச்சோடிக்கிடக்கின்றன.
அவற்றை எப்போதும்
நீ வரலாறு ஆக்கினாய்.

உன் எழுத்துக்களுக்கு
முற்றுப்புள்ளி இடும்போதெல்லாம்
அதில்
உதய சூரியனைத்தானே
கண்டாய்.
எங்கள் ஆட்சியில்
சூரியன் அஸ்தமிப்பதே இல்லை
என்றானே அந்த
பெருமைக்கார வெள்ளையன்!
உன் தமிழ்
உலகத்தின் எல்லா கிழக்குவிளிம்பிலும்
உதயசூரியனாய்த்தானே
சிரித்துக்கொண்டிருக்கிறது.
"கிழக்கிலே அஸ்தமிக்கும் சூரியனே"
என்று பாமரத்தனமாய்
இவர்கள் கூறினாலும்
அது கண்ணீர் கசியும்
"பா மரத்து" வரிகள் அல்லவா!

அந்தக்காவேரி
மில்லியன் மில்லியன்களாய்
தண்ணீரை டி எம் சி யாய் மாற்றியபோது
இந்தக்காவேரி
பில்லியன் பில்லியன் டி.எம்.சி களை
கண்ணீராக்கி
கலங்கடித்து விட்டதே
இத் தமிழ் நாட்டை.
உன் இழப்பின் சோகம்
எத்தனைக்கு எத்தனை
கொடுமையானதோ
அத்தனைக்கு அத்தனை
வீரம் செறிந்தது.

தமிழ் இனப்போராளியே!
திராவிட மானம் காக்க‌
அந்த நடுநிசியிலும்
நீதியரசர்களின் மரசுத்தியலை
மேசை தட்ட வைத்து
ஒரு சமூகநீதியை நிமிர்த்திவைத்தாயே.
விஸ்வரூபம் எடுத்த
அந்த நெத்தியடித்தீர்ப்பு தான்
உன் முரசொலியின்
கடைசி இதழில்
நீ இட்ட முற்றுப்புள்ளி.

தமிழ்க்கருவூலமே
இனி இந்த மெரீனா தான்
நம் தமிழின் "சங்கப்பலகை"
போராளிகளின் "பொருநராற்றுப்படையே!"
படைப்பாளிகளின் "கலைஞராற்றுப்படையே!"

தமிழ் வாழ்க!
கலைஞர் வாழ்க!

=========================================================

தலைகுனிந்துகொள்ளடா!

தலைகுனிந்துகொள்ளடா!
________________________________________________

இவர்களுக்கு அவர்கள்
தமிழின விரோதிகள்.
அவர்களுக்கு இவர்கள்
தமிழின துரோகிகள்.
இப்படித்தான்
நம் சேர சோழ பாண்டியர்கள்
தமிழை
ஒரு சுடுகாட்டுக்கு
கொண்டுபோனார்கள்.
நம் தமிழின் வரலாற்றில்
இந்த எலும்புக்கூடுகளும்
கபாலங்களும் தான்
இன்றைய‌
எட்டுத்தொகை பத்துப்பாட்டுகள் ஆயின.
நீயா? நானா?
என்ற வாள்விளையாட்டில்
சிரச்சேதம் ஆனது
நம் அருமைச்செந்தமிழே!
தமிழன் என்று சொல்லடா!..நீ
தலை குனிந்து கொள்ளடா!

_________________________________________ருத்ரா

ரோஜா

ரோஜா
==================================ருத்ரா

காதலைச்சொல்ல
இந்த பூவை விட்டால்
வேறு எந்தப்பூ இருக்கிறது
என்று
ஒரு ரோஜாச்செண்டை
அவளிடம் நீட்டினேன்.

ஆங்கிலத்தை விட்டால்
வேறு என்ன மொழியில்
என் காதலை ஒலிப்பது
என்று
"ஐ லவ் யூ" என
அவளிடம் சொன்னேன்.

அவள் பூவை வாங்கிக்கொண்டாள்.
"ஐ லவ் யூ"க்கு முறுவலித்தாள்.
பின் குளிர்ச்சியாகச் சொன்னாள்!

"நீ
கொடுத்ததையும் சொன்னதையும் தான்
அதோ
அங்கே நிற்கிறான் பார்
அவனுக்கு
கொடுக்கப்போகிறேன்.
சொல்லப்போகிறேன்."

"நன்றி.
அப்படித்தான் இந்த இரண்டையும்
அதோ
அங்கே நிற்கிறாள் பார்
அவளிடமிருந்து
நான் வாங்கி வந்தேன்!"

==========================================================


காலம்


காலம்
================================ருத்ரா இ பரமசிவன்.

எங்கே அது?
கருப்பு சிவப்பா
கண்ணுக்கு தெரியவில்லை.
விடியலும் அந்தியும் தான்
நம்மோடு வரும்
அதன் மைல்கற்கள்..
அதன்
நீளம் அகலம் ஆழம்
யாருக்குத் தெரியும்?
அன்றொரு நாள்
அகல விழியில்
பேருந்தின் பிதுங்கி வழியும்
கூட்டத்தில்
ஒரு மின்னற்பூவைக் கண்டேன்.
என்னை நோக்கி
அனிச்சத்தில்
அம்புப்பார்வை ஒன்று
அவள்
எய்து விட்டாள்.
மெலிதினும் மெலிதாய்
அதன் கூர்மையில்
ரோஜாக்கள் கூழாகின.
வானம் பிசைந்து கொண்டது.
இருட்டு வெளிச்சத்துள் கரைந்தது.
வெளிச்சமோ கருப்பு ஒளி வீசியது.
கனவுப்படலங்கள்
விழித்திரைக்குள்
வினோதமாய் முறிந்து சிதைந்த‌
பிம்பங்களை
ஃப்ராக்டல் ஜியாமெட்ரியாய்
இழை பிரித்து
இழை கூட்டியது.
இனிப்பாய் முறுக்கிப்பிழிந்தபோதும்
நான் கந்தலாய்த் தான் கிடந்தேன்!

அன்று முதல்
அதே பேருந்தில்
அதே தடத்தில்
அதே பேருந்து நிறுத்தத்தில்
அதே பிதுங்கி வழியும்
வியர்வை நாற்றத்து
காடுகளிடையேயும்
அந்த ஆழமான
விழிகளைத்தேடுகிறேன்.
ஆம் இன்னும் தேடுகிறேன்.
அந்தக் காலப்பரிமாணம்
களவு போனது.
வருடங்கள் நெல்லிக்காய்
மூட்டையாய்
சிதறுண்டு போனது.
ஆயிரத்து தொள்ளாயிரத்து
அம்பது சொச்சம் ..
இரண்டாயிரத்து சொச்சம் என்று.

வாழ்க்கை என்பது
"பொக்கிஷப்பெட்டி" என்றால்
"பழம் நினைவுகளே" பொக்கிஷம்.
பழையதை தூக்கியெறி என்றால்
அந்த காலிப்பெட்டியை
சுமப்பதே பெரும் சுமை.
அர்த்தமற்ற பாறாங்கல்லை
எப்படி சுமந்து கொண்டிருப்பது?

தி.ஜானகிராமன் நாவல் போல‌
உள்ளம் பிசையும் எழுத்துகளின்
உள்ளே அடைத்த தலையணைகளில்
தூக்கம் கூட‌
எரிமலைகுழம்பின்
இலவம் பஞ்சுச்சதையில்
புரண்டு புரண்டு போக்கு காட்டுகிறது.

கனத்த வாழ்க்கை.
நரைத்த வாழ்க்கை.
புஷ்டியான குடும்பசந்தோஷத்துக்கு
குறைச்சல் இல்லை.

அடிவானத்தில்
வெட்கமில்லாமல்
சூரியனும் கடலோடு
குடைந்து குடைந்து
ஒளியை வைத்து கண் பொத்தி
கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருந்தான்.
காலம்
அர்த்தமற்றதாய்
தன்  அசிங்கமான
பாம்புச்சட்டைகளை
உரித்துப்போட்டு
சென்று கொண்டிருந்தது,
செத்தபாம்பாய்
என் மின்னல் பூமாலையும்
அடித்து நசுக்கப்பட்டு கிடந்தது.
அந்த விழிகள் மட்டும்
என்னைத்தீண்டிக்கொண்டே இருந்தன.
காலமாம் காலம்!
அது பொத்தலாய்க் கிடந்தது.

==========================================

கலைஞர்- ஆறு

கலைஞர்- ஆறு
=============================================ருத்ரா

கலைஞர்- 4
கலைஞர்- 5
என்ற வரிசையில் உன்னை
கலைஞர் 6 என எழுதுவதற்குள்
செந்தமிழின்
"பஃறுளி ஆறாய்"
அந்த வங்காளக்குடாக்கடலையே
சுருட்டிக்கொண்டு
அந்த சந்தனப்பேழைக்குள்
அடைந்து கொண்டாயே!

சந்தனப்பேழை கூட‌
உன் பேனாவுக்கு ஒரு பிழை!
அது உன்
செந்தமிழ்ப்பேழை அல்லவா.
அதனுள் நீ
ஆயிரம் ஆயிரம் விதைகள் ஆகினாய்.
செம்மொழித்தமிழின்
அந்த பிரம்மாண்ட விதைகள்
உலகத்தமிழின் பூங்கா ஆகிறது.
உன் அன்பு உள்ளங்கள்
"எழுந்து வா தலைவா!
நடந்து வா தலைவா"
என்றன.
ஆனால் அது
உன் இதயபேரொலியின்
எதிரொலியாய்
எழுந்து வா தமிழா!
கிளர்ந்து வா தமிழா!
என்று தான் கிடு கிடுத்தது.

"இழுத்து மூச்சு விடுங்கள்"
என்ற டாக்டரிடம்
"என் மூச்சை விடுவதற்கா
இங்கு வந்தேன்?"
என்று அவர் ஸ்டதெஸ்கோப்புக்குள்
இருக்கும் எமனுக்கும்
கேட்கவேண்டும் என்று தானே
அப்படி "ஜோக்" அடித்தாய்.

உன் மூச்சுக்காற்றே எங்கள் தமிழ்ப்புயல்.
இந்த ஆண்டு வரும் புயலை
கலைஞர் என்று அழைப்போம்.
அது சமூக அநீதிகளை அழிக்கும்.
தமிழின் எதிரிகளை வேரோடு சாய்க்கும்.

அந்த எமன் கூட‌
உன்னிடம் விளையாடிக்கொண்டே இருந்தான்.
எப்படியாவது
உன் பேனாவையும் எழுத்தையும்
பிடுங்கிக்கொண்டு விடலாம் என்று.
பாவம்
அவனுக்கு மிஞ்சியது
பழுதடைந்த உன் கல்லீரலும்
சில உறுப்புகளும் தான்.
"தமிழுக்கும் நம் உயிர் என்று பேர்"
என்று முழங்கிய
உன் உயிர் மூச்சு இதோ
நிரந்தரமான ஒரு ஆக்சிஜன் சிலிண்டராய்
எங்களிடையே
"ஒங்கி உலகளந்த ஒரு தமிழாய்" 
  நிலை கொண்டிருக்கிறது.

அன்புத்தம்பியே !
இரவல் வாங்கிய இதயத்தை
ஒப்படைப்பதாக
வேகமாக ஓடிய
உனக்கு ஒரு ஏமாற்றம்.
அந்த இதயத்தை அங்கு வைக்க
வெற்றிடம் ஏதும் இல்லையே!

அந்த அண்ணாவுக்குள்
ஏற்கனவே இருப்பது
உன் தமிழின் இதயம் அல்லவா!

அண்ணாவாய்
கருணாநிதியாய்
இந்த தமிழ்நாட்டின்
தூசு துரும்புகளில் எல்லாம் கூட
அந்த "தமிழே"
இதயமாய் துடித்துக்கொண்டிருக்கிறது.

அதோ ஒலிப்பிரளயம்
ஒரு புதிய யுகப்பிரளயமாய்
கேட்கின்றது!

தமிழ் வாழ்க!
அண்ணா வாழ்க!
கலைஞர் வாழ்க!

======================================================















ஞாயிறு, 5 ஆகஸ்ட், 2018

"எடது"சாரி


"எடது"சாரி அதிமுகவும் வலதுசாரி ரஜனிகாந்தும்!
==============================================================ருத்ரா
(ஒரு கற்பனை நகைச்சுவை உரையாடல்)


("அண்ணே ..அண்ணே"யின் அரசியல் சாசனங்கள் )

அதிமுக இப்போ "எடது" சாரி.

அண்ணே..அது எப்படிங்க? கம்யூனிஸ்டுகாரங்க கோவிச்சுக்குவாங்களேண்ணே .

ஆமா. அது அப்படித்தான்.எடப்பாடி ஆளுகைக்குள்ள இருக்கிறதுனாலே  அதிமுக இப்போ "எடது" சாரி தான்.

ஓபிஎஸ் விசுவாசிகள் இனி எந்த சாரி?

ஏதாவது ஒரு "ஓரம் போ சாரி"தான்.அதை நிர்மலாம்மா நிர்மால்யமா சொல்லிட்டாங்க.

அது சரிண்ணே! அமித்ஷா தமிழ்நாடு தான் மிக அதிகமான ஊழல் நிறைந்த மானிலம்னு சொல்லிட்டாருங்களே."சாரி" நீங்க தப்பா சொல்றீங்கன்னு கூட பவ்யமா அதிமுக அமித்ஷாவிடம் சொல்லவில்லையே அது ஏன்?

அதான் ஜெயகுமார் ஜெயபேரிகையை வீராவேசமா கொட்டுறாரே! அப்றம் என்ன?

சரி அந்த சாரி இந்த சாரின்னு பாத்ததுக்கப்புறம் ரஜனி எந்த சாரிண்ணே

பச்சப்புள்ளைய கேட்டாலே சொல்லிடுமே.அவரது ஆத்மீக அரசியலுக்கு எடுப்பான காவி சாரி வலது சாரி தானே.அதனாலெ
இப்போ அதிமுக "எடது"சாரி வலது சாரியா ஆகப்போவுது.

என்னண்ணே..என்னென்னமொ சொல்றீங்க.

ஆமா.அமுதிக மேல உள்ள "ஊழல்" கறைய அழிக்க அமித்ஷா
ரப்பர் ஒண்ணு கண்டுபிடிச்சிருக்காரு.அது என்ன தெரியுமா?

என்னண்ணே அது?

அது தான் ரஜனிங்க்ற ரப்பரு.

ஒண்ணுமே புரியலே. முழி பிதுங்குது.

கொஞ்சம் பொறு.மிச்சத்தையும் சொல்லிடுறேன்.

(தொடரும்)


ஜூங்கா- 2



ஜூங்கா- 2
===========================================ருத்ரா


விஜயசேதுபதி அவர்களே.
தாத்தா அப்பா வழியே
அந்த நகைச்சுவைக்கொடி ஏறி
அந்த விண்ணையும் பிளந்து
விலா வலிக்க செய்யும்படி
சிரிக்கவைத்த
சிலிர்ப்புச் சக்கரவர்த்தியே!
நிழல் உலக தாதாக்கள் என்றால்
கொலைக்காடுகளின்
ரத்த ரங்கோலிகளில்
கதை ஓட்டத்தை நகர்த்துவது தானே
மாமுல்.
ஆனால் இந்த படம் வித்தியாசமானது.
விஜய்சேதுபதி
முதன் முதல் நடிப்பை நடிப்பாகாவே
காட்டாமல்
பிலிம்களின் தளும்பல்களில்
அலைச்சிதறலாய்
தன முதல் படத்தில் அசத்தியிருந்தாரே
அதன் முத்திரை
மேலும் தங்கமுலாம் ஏறி
நம்மை வியக்க வைக்கிறது.
கமலின் நாயகன் பாணி
வேறு ஒரு முற்றிலும் வேறுபட்ட
கோணத்தில்
படத்தை கொண்டுசெல்கிறது.
ஏகே 47ம் மற்றும் லென்ஸ் மாட்டிய
துப்பாக்கிகளும் வேட்டையாட வேண்டிய
களத்தில்
காமெடி கலாட்டாவே இங்கு
பயங்கர ஆயுதம்.
இதில் காதலுக்கும்
பொருத்தமான
ரோஜாசெண்டுகளை செருகி
கிச்சு கிச்சு தாம்பாளம்
கியா கியா தாம்பாளம்
நன்றாகவே ஆடியிருக்கிறார்.
சாயிஷாவுடன் அந்த
கிளுகிளுப்பு காட்சிகள் அருமை.
சென்னைக் குப்பங்களுக்கு
நடுவே உள்ள "பாரிசில்"
ஃ பிரான்சின்  ஈஃபில்  கோபுரம்
தேடி தேடி விளையாடும்
சடு-குடு படு சுவாரஸ்யம்.
பொன்வண்ணன்  சரண்யா
பாத்திரங்கள் ரொம்ப
கல கல கல  கல....
பாட்டியாய் வருபவர்
விஜய சேதுபதிக்கு
செம லொள்ளு ஊட்டிவிடுகிறார்.

கூடவே ஒட்டி வரும்
யோகிபாபுவின் அந்த
பம்பைத்தலைக்குள்
படத்தின் மொத்த காமெடியும்
சுருட்டி வைக்கப்பட்டு
அவ்வப்போது ஐந்து தலை நாகமாய்
சிரிப்பு வெடிகளை சீறவைக்கின்றன.
அந்தக்காலத்து
சபாஷ் மீனா போல்
சிவாஜியும் சந்திரபாபுவுமாய்
உங்கள் இருவர் கூட்டணி
தியேட்டரையே கலக்குகிறது.
ரங்கா ..லிங்கா ..வோடு
இந்த "ஜுங்கா" போகும்
ரோலர் கோஸ்டர் கேம்ஸ்
நம்மை ஜாலியாகவே
கிரு கிறுக்க வைக்கிறது.
மூன்று பெயரில்
மூவேந்தராய் வந்து
வெற்றிக்கொடி நாட்டி விட்டு
போயிருக்கிறார்
விஜயசேதுபதி.

=====================================================