ஜெயகாந்தன்
"சில நேரங்களில் சில மனிதர்கள்"
ஆனால் எல்லா நேரங்களிலும்
இவர் எழுத்துக்களே எழுத்துக்கள்.
சமுதாயம் நீங்கள் பார்க்கிற
சமுதாயம் கிடையாது.
அதன் உள் ஓட்டத்தில் அது
நேர் எதிரிடையானது.
இந்த நுட்பமான தன்மையே
"சோசியல் ஃப்ராய்டிசம்" என்பது.
ஜெயகாந்தன் இந்த உள்சிற்பத்தை
உண்மையாக செதுக்கினார்.
மேலை நாட்டு சிந்தனை இலக்கியம்
நம் நாட்டு பம்மாத்து பக்தி இலக்கியங்கள் போல்
பதுங்கிப்படுத்துக்கொண்டு
அழிச்சாட்டியங்களில் வக்கிர வர்ணங்களுக்கு
சாமரங்கள் வீசியதில்லை.
அவை மனிதத்தை வெளிப்படுத்தில்
ஒளிவு மறைவு காட்டியதே இல்லை.
அந்த சிந்தனைப்போக்கில்
நம் தமிழ் இலக்கியத்தின்
அரும்பெறும் கருவூலம் இவர்.
______________________________________
சொற்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக