பக்கங்கள்

செவ்வாய், 24 பிப்ரவரி, 2026

"வெருள்"னு...

 


Vannadasan Sivasankaran S


6ம.நே

 ·

போர்வையை உதறி எறிந்து

எழுந்து உட்கார்ந்தவள் சொன்னாள்

' குதிரை கனைக்கிற சத்தம்'

'அது ஒரு பழுப்பு நிறக் குதிரை'

'பிடரி மயிரைக் கச்சிதமாகக் கத்தரித்திருக்கிறார்கள்'

'இல்லை, நிஜக்குதிரை இல்லை'

'தைல வண்ண வாடை அடிக்கிறது.

யாரோ கனைக்கிற குதிரையை வரைகிறார்கள்'

சொல்லச் சொல்ல நான் பேசாமல் இருந்தேன்.

'வாசலில் ஒரு குதிரை லாடத்தைத் தொங்க விட வேண்டும்'

சரி சரி என்று தட்டிக்கொடுத்து அவளைத் தூங்கவைத்தேன்.

என் உள்ளங்கையில்  இருந்து பச்சை வாசம் அடிக்கிறது.

அது அப்போதுதான் மேயப்பட்ட புல்லின் உடையது.

%

2021


சர்வம் ஹயக்ரீவம் ..

மந்திரம் சொல்லுங்கள்.

உள்ளங்கை பச்சைப்புல் நாத்தம்

போய்விடும்.

இப்படி "ப்ரமை'தட்டிப்போய் தான்

வேதம்லாம் சொல்லியிருக்கோம்.

அந்த "ப்ரம்மை"யைத்தான் 

இன்னும் பிச்சு பிச்சு தின்னுகிட்டிருக்கோம்..

மலையாளத்துல‌

"ப்ராந்து"ம்பாங்க.

தமிழ்ழ பித்தம்பாங்க.

தூய தமிழ்ழ "வெருள்"னு

பகுதி இலக்கணம் சொல்லுவாங்க.

குருதை மட்டுமில்ல.

கழுதங்கிற "மிலேச்ச வர்ண'த்துக்கும்

ஸ்லோகஞ்சொல்லி வச்சிருக்காங்க.

சரி போகட்டும்.

ஹேலுசினேஷன இப்டி

ஆயிரம் இதழ் தாமரையாய்

பிச்சு ஒதரீர்க்கீங்க்ளே...

வொண்டர்ஃபுல்

வண்ணதாசன் அவர்களே.

__________________________________________

சொற்கீரன்

25.02.26

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக