பக்கங்கள்

வியாழன், 11 டிசம்பர், 2025

தமிழின் அக்கினி மூலை


தமிழின் அக்கினி மூலை

_________________________________________-

கவிஞன் பங்குக்கு

கவிஞனைப்பாட‌

ஒரு காகிதமும் பேனாவுமாக‌
அந்த மாமரத்தின் கீழே
உட்கார்த்தேன்.
சளக்கென்று விழுந்தது.
மரத்தின் கிளையில் உள்ள‌
குயில் எச்சமிட்டது.
நான் பேப்பரைத் துடைத்தேன்.
அப்புறம் கசக்கிப்போட்டு விட்டேன்.
அவனோ
மடமடவென்று அந்த
அமுத எச்சத்தை
"குயில் பாட்டு" ஆக்கிக்கொண்டே
போனது
இன்று என் கண்ணில் தெரிகின்றது.
எழுத்தின் எரிமலைக்கு
எச்சில் லாவா தான்
மூச்சு பேச்செல்லாம்.
அந்த மூண்ட தமிழ்க்கவிஞன்
அடையாளத்துக்கு
எதோ முண்டாசு கட்டியிருந்தது
ஆயிரம் இமயமாய்
உயர்ந்து நிற்கிறது.
இவர்கள் காவியில் ஒரு
தார்ச்சட்டியுடன் தயாராய் இருக்க‌
அவன் அன்றே கட்டிவிட்டானே
பல்லாயிரம் அடி உயரத்தில்
அந்த
வான் புகழ் கொண்ட வள்ளுவனுக்குச்
ஒரு சிலையை!
"செந்தமிழ் நாடென" சீறியவன் அல்லவா
அவன்!
பூணூல் பாசம் தடுத்திருக்கலாம்
இல்லையென்றால்
அவனையும்
நக்ஸல் என்று
சிறைக்கம்பிகளில்
மிடைந்து வைத்திருப்பார்களே.
பாரதி..
இந்த நாடு எனும்
வீட்டை நாங்கள் எழுப்பிய போது
இதன் தமிழின் அக்கினி மூலை
நீ தானே!
அதனால் எங்களுக்கு
என்றென்றும் நீயே
விடியல் எனும்
செஞ்சுடரேந்தி!
___________________________________
சொற்கீரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக