பக்கங்கள்

ஞாயிறு, 31 ஆகஸ்ட், 2025

"கம் செப்டம்பர்"

 

"கம் செப்டம்பர்"

_______________________________________


ஆயிரத்து தொள்ளாயிரத்து

அறுபதுகளில்

"ராக் ஹட்சனின்" இந்த‌

இனிய இசை வெள்ளம்

உலகத்தின் செவிமடல்களையெல்லாம்

சுருட்டி வைத்துக்கொண்டு

செங்கோல் செலுத்தியது.

இந்த இசை அல்வாத்துண்டை

மெல்லாத‌

அசைபோடாத‌

இளைஞர் அலகளே 

இல்லை எனலாம்.

கால் தாளங்கள்

பூமியை தன் முத்திரைகளால்

முத்தமிட்ட அந்த 

இசையின் இதயத்தில்

எல்லா நூற்றாண்டுகளும்

சங்கமமம் ஆயின!

நரை திரை இல்லை.

இன்னும் நம் 

மனத்திரையெல்லாம்

துவள்கிறது.

திரை மூடாத 

சீசன் என்று 

நின்று போய்விடாத‌

அதோ

அந்த "குற்றால அருவியில்"

குளிக்கலாம் வாருங்கள்.


_____________________________________________

சொற்கீரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக