poem on the POEM by Erode Thamizanban.
நின்று விடமாட்டேன்
என்று
ஓடிக்கொண்டே இருக்கும்
ஆறு
நீங்கள்.
எந்த ஆற்றுப்படை உங்களுக்கு
இலக்கணம் சொல்லும்.
அல்லது
இலக்கியம் காட்டும்?
உங்கள் "கிம்பர்லீ"க்கு
இந்த கூழாங்கற்கள் ஒதுங்கிக்கொள்ளும்.
ஒரு வேளை
அந்த சிவப்பும் நீலமுமாய்
சிறகு துடிக்கும் அந்த
மீன் கொத்தி
உங்கள் கற்பனை வண்ணங்களில்
எதைகொத்தி
தன் மீது வண்ணமேற்றிக்கொள்ளலாம்
என்று கொத்த வருமுன்
உங்கள் "சிந்தனையின் ஸ்பெக்ட்ரம்"
தரும் வீச்சை
எதிர்கொள்ள இயலாமல்
தடுமாறுமே!
அதுவே எங்களுக்கு என்றும்
அகலாத
"அழகின் சிரிப்பு"
______________________________________________
சொற்கீரன். 27.06.25
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக