பக்கங்கள்

செவ்வாய், 27 மே, 2025

ஒரு சினிமாப்பாடல்

 


ஒரு சினிமாப்பாடல்

_______________________________


இந்தப்பாடலைக் 

கேட்டுப்

பார்த்து

என்ன தோன்றுகிறதோ

அதனோடு

ஒரு "எழிலியல்"

உணர்வில் ஒன்றிப்பாருங்கள்.

போ..பெரிசு..

என்று

காலத்தின் எதோ ஒரு

குப்பைத்தொட்டியில் 

வீழ்ந்து கிடந்து

இதை உணர்வதாக 

எடுத்துக்கொள்ளாதீர்கள்.

இந்த பிரபஞ்சத்துக்கு

என்ன வயது இருக்கும்?

பாருங்கள்

அந்த விஞ்ஞானிக்கு

அவன் கணித சமன்பாடுகள்

ஏற்றும் போதையில்

அது எப்போதும்

இளைமையில் 

ஊஞ்சலாடிக்கொண்டிருப்பது

போல் தான் இருக்கும்.

கவிப்பேரரசு

அந்த ஓரியன் நெபுலாவின்

சுழிப்புகளைக்கூட‌

அவர் கற்பனைக்கன்னியின்

கன்னக்குழிகள் என்று

என்று

ஒரு கிறங்கல் கிடங்கில் இருந்து

சொற்களை

பிசைந்துக்கொண்டிருப்பார்.

இந்தப்பாட்டும் காட்சியும்

உணர்வின் அந்த‌

பொங்குமாங்கடலும்

கலித்தொகையையும்

குறுந்தொகையையும்

கலந்து சீவிக்கொடுத்த‌

நுங்கு பதனீர் சுவையை

அலை எழுச்சிக்களாய்

படைத்துத் தரும்.

களிப்புடன் பாருங்கள்.

_______________________________________

சொற்கீரன்.

("ஊட்டிவரை உறவு" படத்தில் வரும்

"தேடினேன் வந்தது"...பாடல்.)



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக