பக்கங்கள்

செவ்வாய், 16 ஜூலை, 2024

ஒரு "பட்டா"பிஷேகம்.


ஜனநாயத்தில் ஒரு "பட்டா"பிஷேகம்.

__________________________________________

ருத்ரா


அது என்ன?

அந்த பட்டனை தட்டி விட்டால்


கோடிக்கணக்கான‌

பிச்சைக்காரர்களுக்கு

வயிறு குளிர்ந்திடுமா?


அந்த பட்டனைத்தட்டி விட்டால்

சாதிச்சவுக்கடிகள்

நின்று விடுமா?


அந்த பட்டனைத்தட்டிவிட்டால்

மனிதம் 

மலர்ந்து சிரித்திடுமா?


அந்த பட்டனைத்தட்டிவிட்டால்

விலைவாசி வேதாளங்கள்

இறங்கி ஓடிவிடுமா?


அந்த பட்டனைத்தட்டி விட்டால்

தேரோட்டங்களின் சாமிகள்

நம் வீட்டுக்குள் வந்திடுமா?


அந்த பட்டனைத்தட்டிவிட்டால்

நம் அரசியல் சாசனங்களை

பாதுகாக்க மின்வேலி வந்திடுமா?


அந்த பட்டனைத் தட்டிவிட்டால்

பாலைவனம் ஆகிவிட்ட திடலில்

பொதுத்துறைகள் தலை காட்டுமா?


அந்த பட்டனைத் தட்டிவிட்டால்

இந்த பிசாசுகளை விரட்டிவிடும்

ஒரு அலாவுத்தீன் பூதம் வந்திடுமா?


அந்த பட்டனைத்தட்டி விட்டால்

நம்மையே பட்டா போட்டவர்களை

விரட்டி விட முடியுமா?


அந்த பட்டனே நம் கோயில்.

அந்த பட்டனே நம் சாமிகள்.

அந்த பட்டனே நம் சாபங்கள்.


________________________________________________









 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக