பக்கங்கள்

திங்கள், 10 ஜூலை, 2023

உலக மக்கள் தொகை தினம்

 உலக மக்கள் தொகை தினம்

_____________________________________________‍

ருத்ரா




மக்கள் தொகை என்றால்

உங்கள் 

புள்ளிவிவர இயல் கணக்கெடுப்பின்

அரிப்பெடுத்த 

கணித சமன்பாடுகளின் 

எலும்புக்கூடுகள் அல்ல.

இன்னும் டேட்டா சைன்ஸ் என்றும்

மெஷின் லேர்னிங் என்றும்

இந்த சந்தை மந்தைகளின்

பல்ஸ் துடிப்புகளின் வழியே

அந்த "லாபக்காடுகளுக்குள்"

வேட்டையாடி 

மக்களை வெறும்

மக்கிப்போகும் அல்லது மக்கிப்போகா

குப்பைகளின் கிடங்குகளாக ஆய்வு செய்யும்

உத்திகளுக்கு பலியாகும்

ஆடுகளும் அல்ல.

இந்த எண்ணிக்கைகளை 

வைத்துக்கொண்டு

ஹிட்லர் முசோலினிகளின் 

ஆயுதக்கோட்டைக்களுக்கு

ஆள் பிடித்து தந்து

மத வெறி சாதி வெறி இன வெறி

என்று 

கலர் கலரான காக்டெயில்களில்

இந்த மக்களை 

மூழ்கடித்து கணக்கெடுப்பு 

நடத்தும் சூழ்ச்சிகளுக்கு

இரையாகும் வெறும் எண்கள் அல்ல.

பலவீனமாய் உதிர்ந்து போகும்

கோடி கோடி..கோடி

ஈசல்களின் இந்த இறக்கைகளுக்கு

அனுதாபம் காட்டி 

அடுக்கு மாடிக்கட்டிடங்களில்

கண்ணாடி பளபளப்புகள் கொண்டு

உலக அமைப்பு எனும்

நுரைக்கோபுரங்கள் கட்டிய போதும்

ஒன்று நிகழ்ந்துவிடப் போவதில்லை

என்றாவது ஒரு நாள்

இந்த பில்லியன் பில்லியன் புழுக்கள்

எரிமலை லாவாக்குழம்பில்

ஊர்ந்து நெளிந்து சீறியெழும் வரை!


___________________________________________________________




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக