பக்கங்கள்

சனி, 23 டிசம்பர், 2017

வேலைக்காரன்

வேலைக்காரன்
==========================================ருத்ரா


"உலகத்து தொழிலாளர்களே
ஒன்று சேருங்கள்
நீங்கள் இழப்பது ஒன்றும் இல்லை
உங்கள் அடிமைச்சங்கிலிகளை தவிர."

என்ற கம்யூனிஸ்ட் மேனிஃபெஸ்டோவுக்கு
குப்பத்தது குத்தாட்டங்களிடையேயும்
ஒரு அக்கினி ரோஜாவின்
நாற்றை பதியம் இட்டிருக்கிறார்
இயக்குநர் மோகன் ராஜா.
"சர்ப்லஸ் தியரி ஆஃப் வேல்யூ"
"தியரி ஆஃப் எக்ஸ்ப்லாய்டேஷன்
ஆஃப் சர்ப்லஸ் வேல்யூ"
மார்க்ஸ் சொன்ன
சுரண்டல் நுட்பம் இது தான்.
உற்பத்தி செலவு
ஆயிரத்தில் ஒரு மடங்கு
இருந்தாலும்
அதி நவீன கணக்காயர்களைக்கொண்டே
அதை "உல்டா"வாய் ஆக்கி
சந்தைக்கடலில்
அந்த "உபரி மதிப்பை"
அப்படியே பாக்கெட்டில்
போட்டுக்கொள்வதே
கார்ப்பரேட்டின் "அனக்கொண்டா"த்தனம்!
இந்தப்படம்
அதை தன் காமிராக்கண்ணின்
காட்சி மற்றும் திரைக்கதைத் தெறிப்புகள்
மூலம் காட்டியிருக்கிறது.
இதன் மூலம்
வெறும் மசாலா இயக்குனர்களிடமிருந்து
வேறு பட்டு
எங்கோ ஒரு சிகரத்தில் போய்
உட்கார்ந்து கொண்டார்
மோகன்ராஜா அவர்கள்.
அந்த சிகரத்துக்கும் மேல்
வைப்போம் நாம்
ஒரு மகுடத்தை அவர் தலைமீது!

ஊதாக்கலர் ரிப்பனை வைத்துக்கொண்டு
பாட்டுப்பாடி
வெற்றியின்
தன் முதல் அத்தியாயத்தை
எழுதிய சிவ கார்த்திகேயன்
இப்போது
அந்த "இமாலய"கயிலாயம் வரை
உயரம் ஏறி
கலக்கியிருக்கிறார்.

வில்லனாய் நடித்தாலும்
நடிப்பின் பல்கலைகழகம் ஒன்றை
தனக்குள்
பதுக்கிவைத்துக்கொண்டு
செதுக்கிக்கொண்டே இருக்கும்
அற்புத நடிப்புக்கலைஞர்
ப்ரகாஷ் ராஜ் என்பது
நாம் அறிவோம்.
அந்த "கில்லியில்"
செல்லம் செல்லம் என்று
பதறும் அந்த உணர்ச்சிக்குழம்பு
விஜயை கூட‌
பாடம் படித்துக்கொள்ள செய்யும்
நுட்பம் அது.
இந்தப்படத்தில்
அது முற்றிலும் புதுமையானது.
நயன தாரா
ஒரு "மின்காந்த"ரோஜா!
படத்தின் "குவாண்டம் மெக்கானிக்ஸ்க்கு"
அவர் புன்னகை
ஒரு ஸ்விட்ச்சை தட்ட
நிச்சயம் தேவைப்படுகிறது.
நிழல் படிந்த அவர் கண்களில்
ஒரு "பிளாக் ஹோல்"கவர்ச்சி
என்பது நடிப்பின் புயல்
மையம் கொள்ளும் பெருஞ்சுழி.

ஃபகத் பாசில் பற்றி
நாம் குறிப்பிட்டே ஆகவேண்டும்.
அவர் மலையாள முத்திரைகள்
வெற்றி குவிக்கும்
சின் முத்திரை என்பதில்
ஐயமே இல்லை.
கணினி அறிவு
மக்கள் நலம் எனும்
வாய்க்காலுக்குள்
பாயவிடாமல்
விஞ்ஞான பரிணாமத்துக்கும்
அதை வளரவிடாமல்
அழகிய படம் எடுக்கும்
நல்லபாம்பாகவே
வைத்துக்கொண்டிருக்கும்
கார்ப்பரேட் உத்திகளின்
பாம்புபிடாரனாக‌
நன்கு "படம்" காட்டியிருக்கிறார்
ஃபாசில்.
வேலைக்காரன் என்ற‌
பழைய படம்
சூப்பர் ஸ்டார்களின்
குத்தாட்டங்களை மட்டுமே
குத்தகைக்கு எடுத்திருந்தது.
இந்தப் படம் தான்
அதன் சமுதாய அர்த்தத்தை
அற்புதமாய் காட்டீருக்கிறது.
மார்க்ஸின்
அந்த "மூலதனத்தை"க்கூட‌
மூலதனமாக்கி
ஒரு படம் பண்ணமுடியும்
என்ற துணிச்சல் காட்டிய‌
மோகன்ராஜா.. சிவகார்த்தியன்
குழுவினரை
நாம் பாராட்டியே ஆகவேண்டும்.
அது
என்ன கூச்சலா?
இரைச்சலா?
இல்லை இல்லை
அடி நாதமாய்
இதயங்களை கிள்ளுகின்ற‌
இனிமைப்புயல் அது என்று
நம்மை புல்லரிக்க வைப்பது
அநிருத்.......
ஆம்  அநிருத் எனும்
இசைச் சுநாமியே அது.

=====================================================















2 கருத்துகள்:

KILLERGEE Devakottai சொன்னது…

அது என்ன கூச்சலா ? இறைச்சலா ?
சனிருத்தை இப்படியா கேவலப்டுத்துவது ?
காலம் முழுவதும் அரைச்ச மாவுதான்.

ruthraavinkavithaikal.blogspot.com சொன்னது…

"அடி நாதமாய்

இதயங்களை கிள்ளுகின்ற‌

இனிமைப்புயல் அது என்று

நம்மை புல்லரிக்க வைப்பது"

இந்த வரிகளை நீங்கள் பார்க்கவில்லையா?

கில்லர்ஜி அவர்களே

சினிமா இசையின் அம்பது அறுபதுகளின் (1050-60)
மெலோடி எங்கோ காணாமல் போய்விட்டது
என்பதே உண்மை.

அன்புடன் ருத்ரா

கருத்துரையிடுக