ஊசியிலைக்காடுகள்............ருத்ரா

சமுதாயம் ஒரு காடுதான்.அதன் அவலங்களின் ஊசிமுனைகள் மானுட‌ இலக்குகளை கந்தல்ஆக்கி விடுகின்றன.இந்த கோணம் எதிர்மறையாய்இருப்பினும் நம் அகக்கண்ணாடியில் நேர் பிம்பங்களாகி நம்மை நெறிப்படுத்துகின்றன.இந்த பயணமும்இனிமையானதே. கனியப்போகும் கனவுகளோடு தொடரலாம் நண்பர்களே! வாருங்கள். அன்புடன் ருத்ரா இ பரமசிவன்

▼

பக்கங்கள்

▼

வியாழன், 9 பிப்ரவரி, 2017

திருவள்ளுவர் பாடிய கானாப்பாட்டு (2)


திருவள்ளுவர் பாடிய கானாப்பாட்டு  (2)
 ================================================ருத்ரா


"காசு துட்டு மணி"...


பொருளல் லவரை பொருளாகச் செய்யும்
பொருளல்லது இல்லை பொருள்.....(குறள்.751)


பொருந்தி உள்நிற்பது பொருள்.
மனிதன் ஆளுமைப் பொதிவே பொருள்.
பொதி என்பதும் பொருளே.

பொருட்படுத்தப்படாத கழுதையின்
முதுகுப் பொதிகள் மட்டுமே இங்கு
பொருட்படுத்தப்படுபவை.

பொதிகள் இல்லாத 
மனிதர்கள் கூட‌
இங்கு வெறும் கழுதைகளே.

இல்லாதது இருப்பது போல்
ஆகிவிடும் இலக்கணமே 
இங்கு பொருள்.

பொருள் இருப்பவன் புரட்டும்
விரல் ரேகை கூட 
இங்கு இலக்கியம்.

வருகை இடுகை வாழ்க்கை போல்
 "பொதிகை" எனும் சொல்லே..தமிழின்
கருப்பொருள் உரிப்பொருள் எல்லாம் ஆனது.

அன்பிலதும் என்பிலதும்
பொருள் பெற்றால் போதும்
உலகமே அதன் காலடியில்.

செல்வத்துக்கு மட்டுமே வாக்கு உண்டு.
செல்வ வாக்கே எங்கும் "செல் வாக்கு"ஆகும்.
செல்வம் வாங்காத வாக்குகளா?
தேர்தல் கணிப்புகளே சாட்சி.

"செல்வத்துள் செவிச்செல்வம் அச்செல்வம்.."
பொறுங்கள் வள்ளுவரே
அந்தக் "கவரை" வாங்கிவிட்டு வருகிறேன்.
ஓட்டுச்செல்வம் உங்களுக்குத் தெரியுமா?

ஈக்களுக்கும் கொசுக்களுக்கும்
பொறியியல் கல்லூரிகள்.
அதனால் வெறும் "ஈ" மொய்த்த பண்டமே
எங்கள் "தாராளமய"பொருளாதாரம்.

"இ"பொருள்களும் "இ" சந்தையும்
பண்டம் மாற்ற வந்ததில்..மனித
இதயம் களவு போனது.

இது மின்னல் பொறியா? இன்னல் பொறியா?
"மூளைப் பொருட் காட்சியில்"..சூது
பகடைகளே இங்கு படிக்கட்டுகள்.

மானிட வாசனையற்று
அச்சடித்த நோட்டுகளில்
பொருள் கூட இங்கு வெறும்
நம்பர்கள் (விலை) ஆனதுவே.

=============================================
ruthraavinkavithaikal.blogspot.com நேரம் 8:57 PM
பகிர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

‹
›
முகப்பு
வலையில் காட்டு
Blogger இயக்குவது.