வெள்ளமோ வெள்ளமோ (5)
ஒரு "ப ஃ றுளி யாறு "பெருகட்டும்.
=============================================ருத்ரா இ.பரமசிவன்
வெள்ளத்தனைய பண நீட்டம் தேர்தலில் நம்
உள்ளத் தனையதே ஜனநாயகம்.
வெள்ளத்தையே மூழ்கடிக்கும்
இலவச வெள்ளம்
வரப்போகுது! வரப்போகுது ! கவனம் !
வெள்ளத்தின் கண்ணீர் வடியட்டும்.
உள்ளங்கள் தெளியட்டும்.
புத்தாண்டு இரண்டாயிரத்தின் பதினாறு ல்
நம் மடமைகள் மீது
"கல் பொருது இறங்கும்"
சிந்தனையின்
ஒரு "ப ஃ றுளி யாறு "பெருகட்டும்.
புதிய யுகம் மலரட்டும்.
===========================================================
அன்புடன்
ருத்ரா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக